‘ஐ’ விழா - அர்னால்ட் பாராட்டு கடிதம்!

‘ஐ’ விழா - அர்னால்ட் பாராட்டு கடிதம்!

செய்திகள் 24-Sep-2014 2:35 PM IST VRC கருத்துக்கள்

சென்னையில் சமீபத்தில் நடந்த ‘ஐ’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஹாலிவுட் நடிகர் அர்னால்ட், இப்படத்தின் தயாரிப்பாளர் ரவிச்சதிரனுக்கு ஒரு பாராட்டு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் ‘‘எனது சென்னை பயணத்தை இனிமையாக்கிய உங்களுக்கு நன்றி! ‘ஐ’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நானும் ஒரு அங்கமாக இருந்ததற்கு மிகவும் பெருமைப்படுகிறேன். ஆஸ்கர் விருது வழங்கும் விழா, குளோபல் விருது வழங்கும் விழா என நான் எத்தனையோ விழாக்களில் கலந்துகொண்டுள்ளேன். அதிலிருந்தெல்லாம் இந்த விழா எனக்கு பெரும் மகிழ்ச்சியை தந்தது.

நான் அங்கு வந்து இறங்கியதில் இருந்து தங்கும் இடம், அருமையான உணவு என என்னை நீங்கள் கவனித்துக் கொண்ட விதம் என்னை வியக்க வைத்தது. ‘ஐ’ ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி சிறப்பாக, வித்தியாசமாக நடந்தது. அங்கிருதவர்களின் உத்வேகம் என்னை பிரமிக்க வைத்தது. மேடையில் நடந்த ஆணழகர்களின் நிகழ்ச்சி என்னை பிரமிக்க வைத்தது. அவர்களை பாராட்ட என்னால் மேடையேறாமல் இருக்க முடியவில்லை. ஏனென்றால் அதுதான் நான் மேடையேற சிறந்த தருணமாக நினைத்தேன். உங்கள் விருந்தோம்பலுக்கும், வரவேற்பிற்கும் மிக்க நன்றி! உங்களுடன் இணைந்து பணியாற்றும் நாளை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்’’ என்று அந்த கடித்த்தில் அர்னால்ட் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

டிக் டிக் டிக் - டிரைலர்


;