பிரச்னையில் சிக்கி தவிக்கும் விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா!

பிரச்னையில் சிக்கி தவிக்கும் விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா!

செய்திகள் 24-Sep-2014 11:51 AM IST VRC கருத்துக்கள்

‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘தேசிங்கு ராஜா’ உட்பட பல படங்களை இயக்கிய எழில் தற்போது இயக்கி வரும் படம் ‘வெள்ளைக்கார துரை’. இந்தப் படத்தில் விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா ஜோடியாக நடிக்கிறார்கள். இப்படம் குறித்து இயக்குனர் எழில் கூறும்போது, ‘‘ஒரே பிரச்னையில் சிக்கி தவிக்கும் விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா இருவரும் அந்த பிரச்னையிலிருந்து மீண்டு காதலில் சேரும் கதைதான் ‘வெள்ளைக்கரா துரை’ படம். இதனை காமெடி மற்றும் கமர்ஷியல் விஷயங்கள் சேர்த்து இயக்கி வருகிறேன்’’ என்றார். ‘கோபுரம் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் அன்பு செழியன் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல், பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது. சூரஜ் நல்லுசாமி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு டி.இமான் இசை அமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெருப்புடா - ஆலங்கிலியே பாடல் வீடியோ


;