விஷாலுக்கு 3 அத்தைகள், 3 ஜோடிகள்!

விஷாலுக்கு 3 அத்தைகள், 3 ஜோடிகள்!

செய்திகள் 24-Sep-2014 11:26 AM IST Chandru கருத்துக்கள்

‘அரண்மனை’ படத்தைத் தொடர்ந்து சுந்தர்.சி இயக்கிவரும் ‘ஆம்பள’ படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் விஷால். இப்படத்தில் விஷாலுக்கு மூன்று அத்தைகளும், அவர்களுக்கு மூன்று மகள்களும் இருப்பதாக கதை உருவாக்கப்பட்டுள்ளதாம். இந்த அத்தை கேரக்டர்களில் ரம்யா கிருஷ்ணன், ஐஸ்வர்யா, கிரண் ஆகியோர் நடிக்கிறார்களாம். மகள்களில் ஒருவராக ஏற்கெனவே ஹன்சிகா ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இந்நிலையில் மற்ற இரண்டு மகள் கேரக்டர்களுக்கும் தெலுங்கு நடிகைகளான மாதவி லதா, மதூரிமா ஆகியோரிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறதாம். வினய்க்கு ஜோடியாக ஏற்கெனவே ‘சேர்ந்து போலாமா’ என்ற தமிழ் படத்தில் மதூரிமா நடித்திருக்கிறார். மாதவி லதாவுக்கு முதல் தமிழ்ப் படம் ‘ஆம்பள’தானாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சக்க போடு போடு ராஜா - டிரைலர்


;