ஷிவதா நடிக்கும் புதிய படம் அருவி!

ஷிவதா நடிக்கும் புதிய படம் அருவி!

செய்திகள் 24-Sep-2014 11:21 AM IST VRC கருத்துக்கள்

தற்போது படப்பிடிப்பில் இருந்து வரும் ‘பென்சில்’ மற்றும் ‘மானே தேனே பேயே’ படங்களை தயாரித்து வரும் ‘கல்சன் மூவீஸ்’ பட நிறுவனம் அடுத்து ‘அருவி’ என்ற படத்தையும் தயாரிக்கிறது. இதில் சந்துரு கதாநாயகனாக நடிக்கிறார். விரைவில் ரிலீசாகவிருக்கும் ‘ஷிவானி’ படத்தின் கதாநாயகனும் இவரே! ‘அருவி’ படத்தில் சந்துருவுக்கு ஜோடியாக ‘நெடுஞ்சாலை’ புகழ் ஷிவதா நடிக்கிறார். கிருஷ்ணா நடித்த ‘அலிபாபா’ படத்தை இயக்கிய நீலன் இப்படத்தை இயக்குகிறார். இரண்டு மலையாள படங்களுக்கு இசை அமைத்துள்ள ராஜேஷ் ராஜ் இப்படத்தின் மூலம் தமிழில் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பும் தற்போது நடந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பென்சில் - டிரைலர்


;