‘ஐ’ விழாவுக்கு வரும் சில்வஸ்டர் ஸ்டாலோன்!

‘ஐ’ விழாவுக்கு வரும் சில்வஸ்டர் ஸ்டாலோன்!

செய்திகள் 24-Sep-2014 10:51 AM IST VRC கருத்துக்கள்

சென்னையில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்த ‘ஐ’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை தொடர்ந்து இப்படத்தின் ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆடியோ விழாக்களும் மிகப் பிரம்மாண்டமான முறையில் நடைபெறவிருக்கிறது. சென்னையில் நடந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் கலந்துகொண்டு சிறப்பிக்க, ‘ஐ’ தெலுங்கு ஆடியோ விழாவில் இன்னொரு பிரபல ஹாலிவுட் நடிகரான ஜாக்கிசான் கலந்துகொள்ளவிருக்கிறார். இதனைத் தொடர்ந்து மும்பையில் நடைபெறவிருக்கும் ‘ஐ’ ஆடியோ விழாவில் இன்னொரு ஹாலிவுட் ஆக்‌ஷன் ஹீரோவான சில்வஸ்டர் ஸ்டாலோன் சிறப்பு விருந்திரனாக கலந்து கொள்ளவிருக்கிறார். இந்த இரண்டு விழாக்களுக்குமான பணிகளை ‘ஐ’ படக்குழுவினர் சுறுசுறுப்பாக செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்திய சினிமாவிலேயே ஒரு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு இத்தனை உலக பிரபலங்களை அழைத்து வருவது இதுதான் முதல் முறை!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விசிறி - டிரைலர்


;