கீது மோகன்தாஸுக்கு ஆஸ்கர் விருது கிடைக்குமா?

கீது மோகன்தாஸுக்கு ஆஸ்கர் விருது கிடைக்குமா?

செய்திகள் 24-Sep-2014 10:30 AM IST VRC கருத்துக்கள்

நடிகை கீது மோகன்தாஸ் இயக்கிய ‘லயேர்ஸ் டைஸ்’ என்ற ஹிநிதிப் படம் ஆஸ்கர் விருதுப் போட்டிக்கு தேர்வாகியுள்ளது. கங்கணா ரணாவத் நடித்த ‘குயின்’, ராஜ்குமார் ராவின் ‘ஷாஹித்’ உட்பட 30 இந்திய மொழி படங்கள் ஆஸ்கர் நாமினேஷனுக்கு போட்டியிட, அதிலிருந்து ‘லயேர்ஸ் டைஸ்’ படம் மட்டும்தான் ஆஸ்கார் நாமினேஷனுக்கு தேர்வாகியுள்ளது. தன் கணவரைத் தேடி டெல்லிக்கு பயணமாகும் கமலா என்ற ஒரு பெண்மணியின் கதையை சித்தரிக்கும் இப்படத்திற்கு ஏற்கெனவே 2 தேசிய விருதுகள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. நடிகை கீது மோகன்தாஸ் ஏராளமான மலையாள படங்களில் நடித்தவர் என்பதோடு மாதவன் நடித்த ‘நளதமயந்தி’ படம் உட்பட சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கு ஆஸ்கர் விருது கிடைக்குமா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்து விடும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ரிவால்வர் ராணி


;