உருவாகிக் கொண்டிருக்கிறது ‘சதுரங்க வேட்டை’ 2ம் பாகம்!

உருவாகிக் கொண்டிருக்கிறது ‘சதுரங்க வேட்டை’ 2ம் பாகம்!

செய்திகள் 24-Sep-2014 10:28 AM IST Chandru கருத்துக்கள்

ஒரு சில படங்கள் வசூல்ரீதியாக சாதிக்கிறதோ இல்லையோ, விமர்சனரீதியாக பெரிய பெயரை சம்பாதித்துவிடும். அந்தவகையில் வினோத்தின் இயக்கத்தில் ‘நட்டி’ நட்ராஜ் நடித்த ‘சதுரங்க வேட்டை’ திரைப்படத்திற்கு ஒட்டுமொத்த மீடியாவும் பாராட்டுக்களை வாரி வழங்கியது. குறிப்பாக, ‘‘மணி இஸ் ஆல்வேஸ் அல்டிமேட்!’’, ‘‘ஒரு பொய் சொல்றோம்னா அதுல உண்மையும் கலந்திருக்கணும்!’’ என இப்படத்தின் ஒவ்வொரு வசனத்திற்கும் தியேட்டரில் கைதட்டல்கள் கிடைத்தன. ‘சதுரங்க வேட்டை’யில் இடம்பெற்ற ஒவ்வொரு மோசடியும் அன்றாட வாழ்க்கையில் பொதுமக்கள் சந்தித்து வந்ததால் ரசிகர்களிடமும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மொத்தத்தில் இந்த வருடத்தில் வெளிவந்த படங்களில் ‘சதுரங்கை வேட்டை’ ஒரு ‘ரேர் பீஸ்’!

இயக்குனர் மனோபாலா தயாரித்த இப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் வாங்கி வெளியிட்டது. இப்படம் தந்த உற்சாகத்தில் இயக்குனர் வினோத், தற்போது 3 கதைகளை தயார் செய்து வைத்திருக்கிறாராம். அதில் ஒரு கதை ‘சதுரங்க வேட்டை’யின் இரண்டாம் பாகமாம். முதல் பாகத்தைவிட சுவாரஸ்யமாக உருவாகியிருக்கும் இந்தக் கதை விரைவில் அடுத்த கட்டத்தை எட்டவிருக்கிறது என்கிறார்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹர ஹர மஹாதேவகி - பாடல் வீடியோ


;