சிம்புவின் ‘இது நம்ம ஆளு’ படத்துக்கு பாட்டு ரெடி!

சிம்புவின் ‘இது நம்ம ஆளு’ படத்துக்கு பாட்டு ரெடி!

செய்திகள் 24-Sep-2014 10:17 AM IST Chandru கருத்துக்கள்

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா நடிக்கும் ‘இது நம்ம ஆளு’ படம் சத்தமில்லாமல் வேகவேகமாக வளர்ந்து வருகிறது. கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கும் இப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கிறார் சிம்புவின் தம்பியான குறளரசன். இப்படத்திற்காக இவர் உருவாகியுள்ள பாடல்களில், க்ளைமேக்ஸ் தவிர்த்து மற்ற பாடல்கள் அனைத்தும் முழுமையாக முடிந்துவிட்டதாக சிம்புவே ‘ட்வீட்’ செய்திருக்கிறார். அதோடு தனது தம்பி குறளசரனின் இசையில் உருவான பாடல்களைக் கேட்டு ரொம்பவும் சந்தோஷமாக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். அக்டோபரில் இப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீஸர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அறம் - டீசர்


;