‘கத்தி’ பட விநியோகத்தில் ‘ஆரம்பம்’ டிஸ்ட்ரிபியூட்டர்!

‘கத்தி’ பட விநியோகத்தில் ‘ஆரம்பம்’ டிஸ்ட்ரிபியூட்டர்!

செய்திகள் 24-Sep-2014 10:10 AM IST Chandru கருத்துக்கள்

கடந்த வருட தீபாவளிக்கு அஜித் நடிப்பில் வெளியான ‘ஆரம்பம்’ படத்தின் கோயம்புத்தூர் வெளியீட்டு உரிமையை வாங்கியவர்கள் காஸ்மோ ஃபிலிம்ஸ். தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ‘கத்தி’ படத்தின் கோயம்புத்தூர் வெளியீட்டு உரிமையையும் இவர்களே வாங்கியிருக்கிறார்களாம். அஜித்தின் ‘ஆரம்பம்’ படத்தைவிட விஜய்யின் ‘கத்தி’ படத்திற்கு பெரிய தொகை கொடுக்கப்பட்டிருக்கிறதாம். இவர்களே விஜய்யின் ‘ஜில்லா’ படத்தையும் கோயம்புத்தூரில் வெளியிட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதோடு, ‘கத்தி’ படத்தின் கேரள வெளியீட்டு உரிமையை பெரிய தொகை கொடுத்து வாங்கியிருக்கிறதாம் ஷிபுவின் ‘தமீன்ஸ் ரிலீஸ்’ நிறுவனம். விஜய்யின் பெரும்பாலான படங்களை கேரளாவில் தொடர்ந்து வெளியிடுவது இந்நிறுவனம்தான். அதோடு சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் தயாரிப்பாளராகவும் இந்நிறுவனத்தார் இருப்பதால், முந்தைய விஜய் படங்களைவிட ‘கத்தி’ படம் கேரளாவில் பெரிய அளவில் ரிலீஸ் செய்யப்படும் என்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு பக்க கதை - டிரைலர்


;