‘யான்’ படத்திற்கு ‘யு’ சர்டிஃபிகேட்!

‘யான்’ படத்திற்கு ‘யு’ சர்டிஃபிகேட்!

செய்திகள் 24-Sep-2014 9:40 AM IST Chandru கருத்துக்கள்

ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் இயக்கத்தில் ஜீவா, துளசி நாயர், தம்பி ராமையா, கருணாகரன், நாசர் ஆகியோர் நடித்திருக்கும் ‘யான்’ படம் வரும் அக்டோபர் 2, காந்தி ஜெயந்தி அன்று வெளியாகவிருக்கிறது. ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு சென்சாரில் ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது. அமிதாப் பச்சனின் நண்பரும், அவரின் பல படங்களுக்கு (குறிப்பாக ‘பிளாக்’) ஒளிப்பதிவு செய்துள்ளவருமான ரவி கே.சந்திரனின் ‘யான்’ பட டிரைலரைப் பார்த்துவிட்டு அமிதாப் பச்சன் பெரிதும் பாராட்டியிருக்கிறார். அதோடு ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பாடல்களும் ஏற்கெனவே ஹிட்டாகி இருப்பதால், படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த வருடம் வெளியான ‘என்றென்றும் புன்னகை’ படத்திற்குப் பிறகு ஜீவாவின் நடிப்பில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகவிருக்கிறது ‘யான்’.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கீ - டீசர்


;