புது கலாச்சாரத்தை சொல்லும் யாவும் காதலே!

புது கலாச்சாரத்தை சொல்லும் யாவும் காதலே!

செய்திகள் 23-Sep-2014 6:17 PM IST VRC கருத்துக்கள்

நூற்றுக்கும் மேற்பட்ட மொழிமாற்று படங்களை தமிழாக்கம் செய்ததுடன் தமிழகம் முழுவதும் வியோகம் செய்ததுடன், பல படங்களை தயாரித்தவர் ஏ.ஆர்.கே.ராஜராஜா.
இவர், ஜெய் சினிமாஸ் - ரசி மீடியா இணைந்து தயாரிக்கும் ‘ யாவும் காதலே’ என்ற படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். இந்த படத்தில் சுப்பு கதாநாயகனாக நடிக்கிறார். இவர் ‘மத்தாப்பு’ படத்தில் நாயகனாக அறிமுகமானவர். இன்னும் இரண்டு நாயகர்களாக சிவா , பர்தேஷ் ஆகியோரும் நடிக்கிறார்கள். கதாநாயகிகளாக ரஞ்சனா மிஸ்ரா, சிம்மிதாஸ் இருவரும் நடிக்கிறார்கள்.

படம் பற்றி இயக்குனர் கூறும்போது,

‘‘பெரியோர்களால் நிச்சயம் செய்து திருமணம் செய்து வாழ்வது நமது பாரம்பர்ய கலாச்சாரம்.இன்று காலம் மாறிப் போய் திருமணதிற்கு முன்பே ஒன்றாய் வாழ்ந்து அதற்கு பிறகு பிடித்திருந்தால் திருமணம், இல்லையென்றால் நீ உன் வேலையை பார் நான் என் வேலையை பார்கிறேன் என்று சொல்லும் புது கலாச்சாரம் வந்துவிட்டது.

வாழ்ந்து பார்த்துட்டு கல்யாணம் பண்ணிகலாம்ங்கிற மோசமான இந்த கலாச்சாரம் வைரஸ் மாதிரி பரவிக் கொண்டிருகிறது. இதை கதைக்களமாக வைத்து காமெடி கலந்து இப்படத்தை உருவாக்கி’’ வருகிறோம் என்றார். இந்தப் படத்திற்கு எஸ்.சக்திவேல் ஒளிப்பதிவு செய்ய, வல்லவன் இசை அமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய படங்கள்

;