தயாரிப்பாளராகும் பி.ஆர்.ஓ.

தயாரிப்பாளராகும் பி.ஆர்.ஓ.

செய்திகள் 23-Sep-2014 6:15 PM IST VRC கருத்துக்கள்

நடிகர்கள் அர்ஜுன், கவுண்டமணி, செந்தில் உட்பட சில நடிகர்களின் மக்கள் தொடர்பாளராக பணியாற்றியவர் மதுரை செல்வம். இவர் ‘சீனி’ எனும் படத்தை தயாரித்து, சினிமாவில் தயாரிப்பாளராகவும் அறிமுகிறார். இந்தப் படத்தை இயக்குனர்கள் மனோஜ்குமார், சுராஜ் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவரும், ‘ஐ லவ் யூ டா’ படத்தை இயக்கியவருமான ராஜதுரை இயக்குகிறார். இந்த படத்தில் சஞ்சீவி என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்க, ஓவியா கதாநாயகியாக நடிக்கிறார். ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவு பொறுப்பை பி.சி.ஸ்ரீராமின் உதவியாளர் ஈ.கே.நாகராஜன் கவனிக்கிறார். மக்கள் தொடர்பாளர் மதுரை செல்வம் தயாரிக்கும் இப்படத்தில் இதுவரை தமிழ் சினிமாவில் இல்லாத நிகழ்வாக பதினோரு மக்கள் தொடர்பாளர்கள் பணியாற்றுகிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;