ரசிகர்களின் கேள்விகளுக்கு அனிருத்தின் சுவாரஸ்ய பதில்கள்!

ரசிகர்களின் கேள்விகளுக்கு அனிருத்தின் சுவாரஸ்ய பதில்கள்!

கட்டுரை 22-Sep-2014 12:58 PM IST Top 10 கருத்துக்கள்

என்னதான் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் தங்களுடைய பேட்டிகள் வெளிவந்தாலும், தன் ரசிகர்கள் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்? தன்னிடம் என்ன கேள்வி கேட்க ஆசைப்படுகிறார்கள் என்பதை அறிந்துகொள்ள ஒவ்வொரு சினிமா பிரபலத்திற்கும் ஆசை இருக்கும். அந்த வகையில், சமீபத்தில் வெளியான விஜய்யின் ‘கத்தி’ ஆல்பத்திற்கு இசையமைத்திருக்கும் அனிருத் நேற்று (செப் 21) மாலை ரசிகர்களுடன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் உரையாடினார். அதில் இடம்பெற்ற சில சுவாரஸ்யமான கேள்விகளும், அனிருத்தின் கலக்கல் பதில்களும் இங்கே தொகுப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

ரசிகர் : உங்க பாட்டு எல்லாமே சூப்பரா இருக்கு. உலக அளவில் சிறந்த இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான்போல் நீங்களும் வருவீங்கன்னு நம்புறேன்.
அனிருத் : அவர் கிங். நான் வெறும் சப்ஜெக்ட்!

ரசிகர் : யுவன் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க? நான் நினைக்கிறேன்... 1000 அனிருத் வந்தாலும் ஒரு யுவனுக்கு ஈடாகாதுன்னு... நான் சொல்றது சரியா?
அனிருத் : உண்மை! நிச்சயம் இது உண்மை!

ரசிகர் : உங்களுக்கு ‘இசைப் புதல்வன்’ என்ற பட்டம் கொடுத்தால் ஏற்றுக் கொள்வீர்களா?
அனிருத் : ஹா.... ஹா.....! இல்லை ப்ரதர்... அதுக்கு இன்னும் நிறைய தூரம் பயணிக்கணும்!

ரசிகர் : உங்க அடுத்த ஆல்பம் எது? அது ‘கத்தி’யைவிட சூப்பரா இருக்குமா?
அனிருத் : ‘காக்கிச் சட்டை’. எப்படி இருக்கும்னு நீங்கதான் சொல்லணும்!

ரசிகர் : ஜேசுதாஸ் சாருடன் பணிபுரிந்த அனுபவம் எப்படி?
அனிருத் : ஆசிர்வதிக்கப்பட்டதைப்போல் உணர்ந்தேன். அந்தப் பாடலின் வெற்றிக்கு அவரே காரணம்!

ரசிகர் : இப்போ உங்களோட கேர்ள் ஃப்ரன்ட் யாரு?
அனிருத் : என் இசை!

ரசிகர் : உங்களோட இப்போதைய ‘ரிங்டோன்’ எது?
அனிருத் : ‘கத்தி’ தீம்!

ரசிகர் : ஏ.ஆர்.ரஹ்மானுடன் உங்களை ஒப்பிட்டு பேசுவதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
அனிருத் : இது ஒரு நியாயமே இல்லாத ஒப்பீடு. அவர் ராஜா. நான் ஒரு சாதாரண மந்திரி. ரஹ்மான் சார் ரசிகர்களுக்கு மட்டுமின்றி, எனக்குள்ளும் நான் இதை சத்தமாக சொல்லிக் கொள்கிறேன்.

ரசிகர் : ‘தல’ அஜித்துடனும், ‘சூப்பர்ஸ்டார்’ ரஜினியுடனும் எப்போது இணைவீர்கள்?
அனிருத் : நான் தயார்!

ரசிகர் : காலேஜ்ல உங்களுக்குப் பிடிச்ச இடம் எது?
அனிருத் : பைக் பார்க்கிங்!

ரசிகர் : ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் முழு பின்னணி இசையையும் எப்போது ‘யு டியூப்’பில் பதிவேற்றம் செய்வீர்கள்?
அனிருத் : 100வது நாள் விழாவில் வெளியிடலாம் என நினைக்கிறேன். எல்லாம் முடிவானதும் நானே அறிவிக்கிறேன்!

ரசிகர் : உங்க வெயிட் எவ்வளவு?
அனிருத் : கம்மிதான்!

ரசிகர் : உங்களுக்கு எப்போ கல்யாணம்?
அனிருத் : எனக்கான சரியான பெண்ணை தேர்வு செய்தததும்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;