கதாநாயகி முகத்தில் குத்துவிட்ட தனுஷ்!

கதாநாயகி முகத்தில் குத்துவிட்ட தனுஷ்!

செய்திகள் 22-Sep-2014 11:13 AM IST Chandru கருத்துக்கள்

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் 4 மாறுபட்ட வேடங்களில் நடிக்கும் ‘அனேகன்’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இன்னும் ஒரு சில ‘பேட்ஜ் ஒர்க்’ காட்சிகள் மட்டுமே படம்பிடிக்க வேண்டியுள்ள நிலையில், ஹாரிஸ் ஜெயராஜின் இசையமைப்பில் உருவாகியிருக்கும் பாடல்களை அக்டோபர் முதல் வாரத்தில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

‘அனேகன்’ படத்தின் ஷூட்டிங்கின்போது கதாநாயகி அமைரா தஸ்தரின் முகத்தில் ஹீரோ தனுஷ் தெரியாமல் குத்து ஒன்றை விட்டிருக்கிறார். அதாவது இப்படத்தில் நாயகன் மட்டுமின்றி நாயகிக்கும் ஆக்ஷன் காட்சிகள் இருக்கின்றதாம். ஒரு காட்சியில், தனுஷ் முன்னால் நிற்கும் ஆள் ஒருவரை அடிக்க கையை பின்னால் இழுத்துச் சென்று ஓங்கியிருக்கிறார். அப்போது, நாயகி அமைரா தஸ்தர் தனஷிற்கு பின்னால் நின்றிருக்கிறார். ஆனால், இது தனுஷிற்குத் தெரியாததால் நாயகியின் முகத்தைப் பதம் பார்த்திருக்கிறது அவரின் கை. திடீரென ஏற்பட்ட இந்த சம்பவத்தால் படப்பிடிப்பில் பரபரப்பு ஏற்பட்டதாம். அதோடு, நாயகியிடம் தனுஷ் பலமுறை மன்னிப்பும் கேட்டிருக்கிறார். தெரியாமல் நடந்த விஷயம்தானே என நாயகியும் இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

திருட்டுப்பயலே 2 - நீண்ட நான் பாடல்


;