மூன்றாவது முறையாக விஷால் - லட்சுமி மேனன் கூட்டணி!

மூன்றாவது முறையாக விஷால் - லட்சுமி மேனன் கூட்டணி!

செய்திகள் 22-Sep-2014 10:56 AM IST VRC கருத்துக்கள்

‘பாண்டியநாடு’, ‘நான் சிகப்பு மனிதன்’ ஆகிய படங்களில் விஷாலுக்கு ஜோடியாக நடித்த லட்சுமி மேனன், மீண்டும் விஷாலுடன் ஒரு படத்தில் இணைந்து நடிக்கிறார். விஷால் தற்போது ஹரி இயக்கத்தில் ‘பூஜை’ படத்தில் நடித்து வருகிறார். விஷாலின் ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடித்துள்ளார். இந்தப் படத்தை தொடர்ந்து விஷால் சுசீந்திரன் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ‘பூஜை’ படத்தில் நடிக்கும் ஸ்ருதிஹாசனே நடிக்கிறார் என்று பேசப்பட்டது. ஆனால் இப்படத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்கவில்லையாம். லட்சுமிமேனன் நடிக்கிறார். தற்போது கார்த்தியுடன் ‘கொம்பன்’ படத்தில் நடித்து வரும் லட்சுமி மேனன், இந்த வருடம் ப்ளஸ்-டூ பரீட்சை எழுத இருக்கிறார். இதனால் சினிமாவுக்கு கொஞ்சம் பிரேக் கொடுக்க திட்டமிட்டிருந்த லட்சுமி மேனனை சுசீந்திரன் படக் குழுவினர் கேரளாவுக்குச் சென்று சந்தித்து படத்திற்காக ஒப்பந்தம் செய்து வந்துள்ளனர். இந்த தகவல்களை லட்சுமி மேனன் தரப்பினரே நமக்கு தெரிவித்தனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கீ - டீசர்


;