‘ஐ’ படம் தீபாவளிக்கு ரிலீஸாவது உறுதி!

‘ஐ’ படம் தீபாவளிக்கு ரிலீஸாவது உறுதி!

செய்திகள் 22-Sep-2014 10:27 AM IST Chandru கருத்துக்கள்

ஷங்கர், விக்ரம் கூட்டணியில் உருவாகியிருக்கும் ‘ஐ’ படம் தீபாவளிக்கு வருமா? வராதா? என்ற சந்தேகம் நிலவி வந்த நிலையில், படம் நிச்சயம் தீபாவளிக்கு ரிலீஸாகும் என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது அப்படத்தின் தமிழ், தெலுங்கு வெளியீட்டு உரிமை வியாபாரங்கள்.

கடந்த 15ஆம் தேதி இசை வெளியீட்டை பிரம்மாண்டமாக நடத்திய ‘ஐ’ டீம் தற்போது படத்தின் பேட்ஜ் ஒர்க் சம்பந்தமான காட்சிகளை படம் பிடித்து வருகிறதாம். இந்த வேலைகள் இன்னும் இரண்டொரு நாட்களில் முழுவதுமாக முடிந்துவிடுமாம். அதோடு படத்தின் கிராபிக்ஸ் வேலைகளும் மொத்தமாக முடிக்கப்பட்டு விடும் என்கிறார்கள்.

இந்நிலையில், ‘ஐ’ படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை சுஷ்மா சினி ஆர்ட்ஸ் பெரும் விலைகொடுத்து வாங்கியிருப்பதாகவும், தெலுங்கு உரிமையை பிரசாத் மற்றும் ஆர்.பி.சௌத்ரி நிறுவனம் இணைந்து வாங்கியிருப்பதாகவும் தயாரிப்பு தரப்பிலிருந்து வந்த நம்பிக்கையான தகவல்கள் உறுதிப்படுத்தியிருக்கின்றன. விரைவில் திரையரங்க ஒப்பந்தப் பணிகளும் துவங்கப்படுமாம்.

ஹரி, விஷால் கூட்டணியில் உருவாகி வரும் ‘பூஜை’ படம் ஏற்கெனவே தீபாவளி வெளியீட்டை உறுதிப்படுத்தியிருப்பதால், ‘ஐ’யும் ‘பூஜை’யும் தீபாவளிக்கு மோதவிருப்பது நிச்சயம். இப்படங்களோடு விஜய்யின் ‘கத்தி’ படமும் வெளியாகுமா என்பது இன்னும் இரண்டொரு நாட்களில் தெரிந்துவிடும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - நானா thaana பாடல் வீடியோ


;