தமிழக ஆளுனர் துவக்கி வைத்த படம்!

தமிழக ஆளுனர் துவக்கி வைத்த படம்!

செய்திகள் 22-Sep-2014 9:53 AM IST VRC கருத்துக்கள்

‘காமராசு’, ‘அய்யாவழி’, ‘நதிகள் நனைவதில்லை’ ஆகிய படங்களுக்குப் பிறகு ‘வைகுண்டா சினி ஃபிலிம்ஸ்’ சார்பில் நாஞ்சில் பி.சி.அன்பழகன் இயக்கி, தயாரிக்கும் படம் ‘நட்சத்திர மழை’. இப்படத்தின் துவக்க விழா நேற்று (21-9-14) சென்னையில் நடந்தது. இந்த விழாவில் தமிழக ஆளுனர் ரோசய்யா கலந்துகொண்டு கேமராவை இயக்கி வைக்க, தயாரிப்பாளர் சங்க தலைவர் கேயார் கிளாப் அடித்து படத்தினை துவக்கி வைத்தார். பிரபல பின்னணிப் பாடகர்களான கே.ஜே.யேசுதாஸ், வாணி ஜெயராம் முதலானோரும் இவ்விழாவில் கலந்துகொண்டு வாழ்த்திப் பேசினர். இப்படம் குறித்து தயாரிப்பாளரும், இயக்குனருமான நான்ஞ்சில் பி.சி.அன்பழகன் கூறும்போது,

‘‘மருத்துவத்தை சேவையாக்கி சமூக அக்கறையோடு வாழ்வை கடந்து செல்லும் இளைஞன் ஒருவன் காதல் மழையில் நனைய, அந்த உணர்வுகளுக்கு உருவங்கள் கொடுக்கும் படைப்பே ‘நட்சத்திர மழை’. மனத்திருப்தியாய் இயங்குபவனே உண்மையான பணக்காரன். மற்றவர்களெல்லாம் இயந்திரங்கள் துணையுடன் இயங்கும் வெற்றிட வறுமைகளே! குணங்களை வெறுத்தாலும் மனிதனை மனிதன் நேசிக்க வேண்டும் என்கிற கருத்தை வலியுறுத்தும் இப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் விரைவில் துவங்கவிருக்கிறது’’ என்றார்.
இரண்டு கதாநாயகர்கள், இரண்டு கதாநாயகிகள் கொண்ட இப்படத்தின் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞ்ரகளின் தேர்வு நடந்து வருகிறது. இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் தயாரிப்பு ஆகிய பொறுப்புக்களோடு, படத்தின் அனைத்து பாடல்களையும் நாஞ்சில் பி.சி.அன்பழகனே எழுதுகிறார். ஆன்டனி இசை அமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;