‘அரண்மனை’ படம் காப்பியா? தடைகோரி வழக்கு!

‘அரண்மனை’ படம் காப்பியா? தடைகோரி வழக்கு!

செய்திகள் 22-Sep-2014 9:42 AM IST Chandru கருத்துக்கள்

சுந்தர்.சி இயக்கி நடித்து கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘அரண்மனை’ திரைப்படத்திற்கு வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஆனால், இப்படம் விமர்சனரீதியாக பல சர்ச்சைகளைக் கிளப்பியது. அதாவது இப்படம் ரஜினி நடிப்பில் 1978ஆம் ஆண்டு வெளியான ‘ஆயிரம் ஜென்மங்கள்’ என்ற படத்தைத் தழுவி எடுக்கப்பட்டிருப்பதாகவும், படத்தில் வரும் பல திகில் காட்சிகள் சில ஹாலிவுட் படங்களிலிருந்து காப்பி அடிக்கப்பட்டதாகவும் இணையதளங்களில் பலரும் எழுதினர். இந்நிலையில் இப்படத்திற்கு தடை விதிக்கக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தைத் தயாரித்த எம்.முத்துராமன் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்கத் திட்டமிட்டு, அதற்காக செல்வா என்ற இயக்குனரிடம் ரூபாய் 25 லட்சம் முன் பணமாக கொடுக்கப்பட்டிருப்பதாகவும், மேலும் சில டெக்னீஷியன்களுக்கும் அட்வான்ஸ் கொடுக்கப்பட்டிருப்பதாகவும், ஆனால் தற்போது வெளியாகியிருக்கும் ‘அரண்மனை’ படம் ‘ஆயிரம் ஜென்மங்கள்’ கதையை ரீமேக் செய்து எடுக்கப்பட்டிருப்பதாக தனக்கு தகவல் கிடைத்திருப்பதாகவும், இதனால் படத்தை தடை செய்ய வேண்டும் எனவும் எம்.முத்துராமன் நீதிமன்றத்தில் கொடுத்துள்ள மனுவில் குறிப்பிடப்பட்டிருக்கிறதாம்.

இதனை விசாரித்த நீதிபதிகள், சம்பந்தப்பட்டவர்கள் இதுகுறித்து விரைவில் பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்களாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

முத்தின கத்திரிக்கா - டிரைலர்


;