ஏழைச் சிறுவனின் உயிரைக் காப்பாற்றிய சிம்பு!

ஏழைச் சிறுவனின் உயிரைக் காப்பாற்றிய சிம்பு!

செய்திகள் 22-Sep-2014 9:38 AM IST Chandru கருத்துக்கள்

பெரும்பாலும் சிம்புவைப் பற்றி சர்ச்சைக்குரிய செய்திகளாகவே வெளிவந்து கொண்டிருக்கும். ஆனால், தற்போது சிம்புவைப் பற்றி வெளிவந்திருக்கும் ஒரு செய்தி சிம்பு ரசிகர்களை நெகிழ வைத்திருக்கிறது. ஆம்... திருவண்ணாமலையைச் சேர்ந்த அசுவத்தாமன் என்கிற ஏழைச் சிறுவனின் மருத்துச் செலவுக்காக பெரும் தொகை ஒன்றைக் கொடுத்து அவனின் உயிர் காக்க உதவியிருக்கிறாராம் சிம்பு. இது குறித்து அந்த சிறுவனின் தந்தை பிரபல நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

அதில் அவர் ‘‘எனது மகன் அசுவத்தாமனுக்கு தோள்பட்டையில் பயங்கர வலி ஏற்பட்டது. திருவண்ணாமலையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தோம். சிறுவயதில் விளையாடும் போது கீழே விழுந்ததில், நோய்த்தொற்று ஏற்பட்டு ரத்தம், நுரையீரல் மற்றும் எலும்பு ஆகிய பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என்று டாக்டர்கள் அதிர்ச்சியளித்தார்கள். உடனே சென்னைக்கு கொண்டு செல்லுங்கள் என்றவுடன் சென்னையில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்த்தோம். நுரையீரல் பாதிப்பு இருந்தாலும், செயற்கை சுவாசம் கொடுத்தாக வேண்டும் என்பதாலும் ஒரு நாளைக்கு ரூ.25,000 ஆகும் என்றார்கள்.

எனக்கு திருவண்ணாமலை கோயிலுக்கு வரும்போது நடிகர் சிம்புவோடு பழக்கம் ஏற்பட்டது. அவருடைய நண்பர் தீபன் மூலம் சிம்பு சாரைத் தொடர்பு கொண்டேன். ஒன்றும் கவலைப்பட வேண்டாம். நானே மருத்துவச் செலவை ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறி, மருத்துவமனைக்கு பேசி அனைத்து ஏற்பாடுகளையும் அவரே செய்துவிட்டார். இப்போது சிகிச்சை முடிந்து, எனது மகன் நன்றாக இருக்கிறான். இன்றைக்கு எனது மகன் நன்றாக இருக்கிறான் என்றால் அதற்கு காரணம் சிம்பு சார் தான்.’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

சிம்புவின் நல்ல மனம் வாழ்க!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு பக்க கதை - டிரைலர்


;