சரித்திரம் படைத்தது ‘ஐ’ டீஸர்!

சரித்திரம் படைத்தது ‘ஐ’ டீஸர்!

செய்திகள் 22-Sep-2014 9:16 AM IST Chandru கருத்துக்கள்

மொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது ஷங்கரின் ‘ஐ’ படம். இதுபோன்ற ஒரு கிராபிக்ஸையோ, மேக்-அப்பையோ இந்திய சினிமா இதற்கு முன்பு கண்டதில்லை எனச் சொல்லுமளவுக்கு, ‘ஐ’ படத்தின் டெக்னிக்கல் விஷயங்கள் உலகத்தரத்திற்கு இணையாக பேசப்படுகின்றன. கிட்டத்தட்ட 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியிருப்பதாக சொல்லப்படும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் கடந்த 15ஆம் தேதி வெளியானது. வெளியான முதல் 12 மணி நேரத்திலேயே 10 லட்சம் ‘யு டியூப்’ பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்தது. அதன் பின்னர் வரிசையாக முந்தைய தமிழ்ப் பட டீஸர், டிரைலர்களின் ‘யு டியூப்’ சாதனைகள் அனைத்தையும் முறியடித்த ‘ஐ’, தற்போது தென்னிந்தியா சினிமாவில் அதிகம் பார்க்கப்பட்ட டீஸரான ரஜினியின் ‘கோச்சடையானை’யும் முந்திவிட்டது. அதுமட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமாவிலேயே 50 லட்சம் பேர் பார்த்த முதல் டீஸர் என்ற சாதனையையும் படைத்திருக்கிறது ‘ஐ’ திரைப்படம்.

படம் வெளிவருவதற்கு முன்பே பல சாதனைகளைப் படைத்துக் கொண்டிருக்கும் ‘ஐ’, ரிலீஸிற்குப் பிறகு இன்னும் என்னென்ன சாதனைகள் படைக்கக் காத்திருக்கிறதே!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாச்சியார் - டிரைலர்


;