கேள்வி தயாரா? பதிலளிக்க ரெடியாகிறார் அனிருத்!

கேள்வி தயாரா? பதிலளிக்க ரெடியாகிறார் அனிருத்!

செய்திகள் 20-Sep-2014 10:58 AM IST Chandru கருத்துக்கள்

செப்டம்பர் 18ஆம் தேதி அனிருத் இசையமைப்பில் உருவான ‘கத்தி’ படத்தின் ஆல்பம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது. அதேபோல் ‘ஐ டியூன்ஸ்’ டாப் 10 லிஸ்டிலும் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது ‘கத்தி’. கூடவே, அனிருத் இசையமைப்பில் இதுவரை வெளிவந்த 6 படங்களின் ஆலபமும் இந்த டாப் 10 லிஸ்டில் இடம் பிடித்திருப்பதால் செம குஷியில் இருக்கிறார் அனிருத். இந்த சந்தோஷத்தை தன் ரசிகர்களுடன் பகிர்ந்துகொள்ள முடிவு செய்திருக்கும் அனிருத், நாளை (செப் 21) மாலை 6 மணிக்கு அவருடைய அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கம் மூலம் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளிக்க இருக்கிறார். நாளை மாலை 6 மணிக்கு அவர் போடும் போஸ்ட் ஒன்றின் கமென்ட் பகுதியில் நீங்கள் கேள்விகளைப் பதிவு செய்தால், அதற்கு பதலளிப்பார் அனிருத்.

என்ன ரசிகர்களே... அனிருத்திடம் என்ன கேள்வி கேட்கப்போகிறீர்கள்?


உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;