தயாரிப்பாளர்களை அழவைக்கும் காமெடி நடிகர்கள்!

தயாரிப்பாளர்களை அழவைக்கும்  காமெடி நடிகர்கள்!

செய்திகள் 20-Sep-2014 10:15 AM IST VRC கருத்துக்கள்

‘ராட்டினம்’ படத்தைத் தயாரித்த ராஜரத்தினம் ஃபிலிம்ஸ் பட நிறுவனம் அடுத்து தயாரிக்கும் படம் ‘கல்கண்டு’. இந்த படத்தில் பிரபல நடிகர் நாகேஷின் பேரனும் ஆனந்த்பாபுவின் மகனுமான கஜேஷ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக டிம்பிள் சோப்டே அறிமுகமாகிறார். இவர்களுடன் கஞ்சாகருப்பு, மனோபாலா, மயில்சாமி, சாமிநாதன், ‘டாடி ஒரு டவுட்’ புகழ் செந்தில், டி.பி.கஜேந்திரன், ஸ்ரீரஞ்சனி, ஜெனிபர் ஆகியோரும் நடிக்கிறார்கள். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ஏ.எம்.நந்தகுமார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (19-4-14) காலை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. அப்போது இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் பேசும்போது,
‘‘நாகேஷை அறிமுகப்படுத்திய இயக்குனர் பாலச்சந்தர் அவர்களின் ஆசியோடுதான் இந்த விழா நடைபெற இருந்தது. ஆனால் சில காரணங்களால் அது முடியாமல் போனது. அவரது ஆசி இந்த அரங்கம் முழுவதும் இருக்கிறது’’ என்றார். இதனை தொடர்ந்து பேசிய
இயக்குனர் கே.பாக்யராஜ், ‘‘நாகேஷ் போன்ற திறமையான கலைஞர்கள் எப்போதும் நிலைத்து நிற்பார்கள்’’ என்றார். இயக்குனர் பி.வாசு கஜேஷை வாழ்த்திப் பேசும்போது, ‘‘நாகேஷின் கிரிடிட் கார்டும், ஆனந்த் பாபுவின் விசிடிங் கார்டும் கஜேஷுக்கு இருக்கிறது. அதை பயன்படுத்தி திறமையாக வளர வேண்டும் கஜேஷ்’’ என்றார்.

இவர்களை தொடர்ந்து டி.ராஜேந்தர் பேசும்போது, ‘‘ நடிகர்கள் மக்களை மட்டும் சிரிக்க வைக்க கூடாது, அவர்களை வைத்து படம் தயாரிக்கும் தயாரிபாளர்களையும் சிரிக்க வைக்க வேண்டும். சில நகைச்சுவை நடிகர்கள் கோடி கணக்கில் சம்பளம் கேட்கிறார்கள். அது நியாயம் தானா? நான் 1500 ரூபாய் கொடுத்த நகைச்சுவை நடிகர் ஒருவர் இன்று கோடிக்கணக்கில் கேட்கிறாராம். நான் அவர் பின்னால் போனதில்லை. அந்த காலத்தில் ஒரு மணிநேரம் ஒன்றரை மணிநேரம் ஒரு படத்தில் நடித்தே அந்த தயாரிப்பாளரையும் மக்களையும் சிரிக்க வைத்தார். இன்று தயாரிப்பாளரை அழ வைத்து மக்களை சிரிக்க வைகிறார்கள்’’ என்று பேசியதும் அந்த பேச்சுக்கு பலத்த கைத்தட்டல்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கவண் - தீராத விளையாட்டு பிள்ளை பாடல் வீடியோ


;