‘பில்லா 2’, ‘தலைவா’, ‘அஞ்சானை’ முந்திய ‘ஐ’!

‘பில்லா 2’, ‘தலைவா’, ‘அஞ்சானை’ முந்திய ‘ஐ’!

செய்திகள் 19-Sep-2014 1:59 PM IST Chandru கருத்துக்கள்

ஒரு படத்தின் உச்சபட்ச எதிர்பார்ப்பு எப்படி இருக்கும் என்பதை சமீபத்தில் நடந்து முடிந்த ‘ஐ’ படத்தின் ஆடியோ விழா தமிழ் சினிமாவிற்கு உணர்த்தியிருக்கிறது. செப்டம்பர் 15ஆம் தேதி ஆடியோவை வெளியிட்ட கையோடு ‘ஐ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸரும் ரிலீஸானது. இந்த டீஸரைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் உலகெங்கும் இருக்கும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு எக்கச்சக்கமாக இருந்ததால், டீஸர் வெளியான முதல் 12 மணி நேரத்திற்குள்ளாகவே 1 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்தது. தொடர்ந்து 50 மணி நேரத்தில் 2.5 மில்லியனையும் 3 நாட்களுக்குள் 30 லட்சம் பார்வையாளர்களையும் கடந்து முந்தைய படங்களின் பல டீஸர் ரெக்கார்டுகளை உடைத்தெறிந்திருக்கிறது.

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை அஜித் நடிப்பில் வெளிவந்த ‘பில்லா 2’ படத்தின் டீஸர்தான் முதன் முதலாக 20 லட்சம் எண்ணிக்கை தொட்ட படம். அப்படத்தின் டீஸரை இதுவரை 28 லட்சத்திற்கும் அதிகமானோர் கண்டுகளித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த ‘தலைவா’ படத்தின் டிரைலரை 34 லட்சம் பேர் ‘யு டியூப்’பில் பார்த்துள்ளனர். சமீபத்தில் வெளிவந்த ‘அஞ்சான்’ படத்தின் டீஸரை இதுவரை 34 லட்சத்திற்கும் அதிகமானோர் கண்டுகளித்துள்ளனர். தனுஷ் நடிப்பில் உருவான ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் டிரைலரை 27 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள். தற்போது ‘ஐ’ டீஸர் வெளியாகி வெறும் 86 மணி நேரங்கள் மட்டுமே ஆன நிலையில், இந்த எல்லா படங்களின் சாதனையையும் முறியடித்து இதுவரை 37 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்.

ரஜினி நடித்த இந்தியாவின் முதல் மோஷன் கேப்சர் டெக்னாலஜியில் உருவான ‘கோச்சடையான்’ அனிமேஷன் படத்தின் டீஸர், டிரைலர்தான் இதுவரை நம்பர் 1 இடத்தில் இருந்து வருகிறது (தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை). இப்படத்தின் டீஸரை 48 லட்சம் பேரும், டிரைலரை 46 லட்சம் பேரும் பார்த்திருக்கிறார்கள். இந்த பிரம்மாண்டமான சாதனையை ஷங்கர் & விக்ரம் கூட்டணியின் ‘ஐ’ முறியடிக்குமா என்பதுதான் தற்போது ‘சீயான்’ ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

திருட்டுப்பயலே 2 - நீண்ட நான் பாடல்


;