பிரபல இசைக் கலைஞர் ‘மாண்டலின்’ ஸ்ரீநிவாஸ் மறைவு!

பிரபல இசைக் கலைஞர் ‘மாண்டலின்’ ஸ்ரீநிவாஸ் மறைவு!

செய்திகள் 19-Sep-2014 11:03 AM IST Chandru கருத்துக்கள்

1969ஆம் ஆண்டு 28ஆம் தேதி ஆந்திராவில் பிறந்த ஸ்ரீநிவாஸ், ‘மாண்டலின்’ இசைக்கருவியை மீட்டுவதில் வல்லவர். இந்திய அரசின் பத்மஸ்ரீ, சங்கீத ரத்னா விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ள இவர் ‘மாண்டலின்’ ஸ்ரீநிவாஸ் என்றே அழைக்கப்படுகிறார். 45 வயதே ஆன இந்த இசை மேதை உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.

ஸ்ரீநிவாஸின் தந்தை சத்யநாராணாவும் ‘மாண்டலின்’ இசைக் கலைஞர்தான். அவருடைய பயிற்சியின் காரணமாகவே ஸ்ரீநிவாஸ் ‘மாண்டலின்’ இசைப்பதில் மிகப்பெரிய கலைஞராக உருவெடுத்தாகவும் கூறுகிறார்கள். ‘இளையராஜா கிளாசிக்ஸ் இன் மாண்டலின்’ என்ற இசை ஆல்பத்தையும் ஸ்ரீநிவாஸ் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீநிவாஸின் மறைவு அவரது குடும்பம் மட்டுமின்றி, இந்திய இசைத் துறைக்கும் மிகப்பெரிய இழப்பு! அவரின் ஆத்மா சாந்தி அடைய ‘டாப் 10 சினிமா’ தனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;