‘தல’ அஜித்துக்கு ஒரு தாலாட்டு! - ஹாரிஸ்

‘தல’ அஜித்துக்கு ஒரு தாலாட்டு!  - ஹாரிஸ்

செய்திகள் 19-Sep-2014 10:49 AM IST Chandru கருத்துக்கள்

‘கத்தி’ படத்தின் பரபரப்பிலும் குஷியிலும் ‘இளையதளபதி’ ரசிகர்கள் உற்சாகமாக சுழன்று கொண்டிருக்க, ‘தல 55’ படத்திற்காக அமைதியாக காத்துக் கொண்டிருக்கிறார்கள் அஜித் ரசிகர்கள். சத்தமில்லாமல் மெருகேறிக்கொண்டிருக்கும் இப்படத்திற்காக ஹாரிஸ் ஜெயராஜ் இதுவரை 3 பாடல்களை தயார் செய்துவிட்டாராம். கௌதம் மேனனும் ஹாரிஸும் மீண்டும் கூட்டணி அமைந்திருப்பது ஒரு புறம் எதிர்பார்பை எகிற வைத்தால், அஜித்திற்காக ஹாரிஸ் இசையமைக்கும் முதல் படம் என்பது இன்னொருபுறம் எதிர்பார்ப்பை எகிற வைத்துக் கொண்டிருக்கிறது. ஹாரிஸ் உருவாக்கியிருக்கும் 3 பாடல்களில் ஒரு பாடல் தாலாட்டுப் பாட்டாம். தற்போது வடஇந்தியாவில் அந்தப் பாடலின் படப்பிடிப்பில் அஜித் நடித்துக் கொண்டிருப்பதாக ஹாரிஸ் ‘ட்வீட்’ செய்திருக்கிறார்.

நவம்பரில் காதுகளுக்கு விருந்தையும், டிசம்பரில் கண்களுக்கு விருந்தையும் படைக்கவிருக்கிறது ‘தல 55’.


உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;