‘‘உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்!’’ - சமந்தா

‘‘உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்!’’ - நடிகரைப் பார்த்து கேட்ட சமந்தா

செய்திகள் 19-Sep-2014 10:13 AM IST VRC கருத்துக்கள்

சமீபகாலமாக சினிமா விழாக்களில் நடிகைகள் தங்களுக்குப் பிடித்தவர்களின் கன்னத்தைக் கிள்ளுவதும், முத்தம் கொடுப்பதும் வழக்கமாகி விட்டது. இதன் தொடர்ச்சியாக நேற்று மாலை சென்னையில் நடந்த ‘கத்தி’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிலும் அப்படியொரு சுவாரஸ்ய சம்பவம் நடந்தது. விஜய், சமந்தாவுடன் ‘கத்தி’ படத்தில் காமெடி நடிகர் சதீஷும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். அவர் மேடையேறிப் பேசும்போது ‘கத்தி’ படம் மற்றும் விஜய், சமந்தா ஆகியோரைப் பற்றி காமெடியாக நிறைய விஷயங்கள் பேசினார். இதனைத் தொடர்ந்து மேடையேறிப் பேசிய சமந்தா தன் பேச்சை முடித்துக்கொள்ளும்போது சதீஷைப் பார்த்து, ‘‘சதீஷ், உன்னை நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்’’ என்று வேடிக்கையாக ஒரு போடு போட்டர். சமந்தா இப்படி பேசியதும் விழா அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அண்ணாதுரை - டிரைலர்


;