விஜய்க்கு பிடித்த கேரக்டர் ‘துப்பாக்கி’ ஜெகதீஷா? ‘கத்தி’ கதிரேசனா?

விஜய்க்கு பிடித்த கேரக்டர் ‘துப்பாக்கி’ ஜெகதீஷா? ‘கத்தி’ கதிரேசனா?

செய்திகள் 19-Sep-2014 10:08 AM IST VRC கருத்துக்கள்

‘கத்தி’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் பேசும்போது, இந்தப் படத்தை நீங்கள் பார்க்கும்போது, ‘துப்பாக்கி’ படத்தில் நான் விளையாட்டாக வேலை பார்த்ததுபோல் இருக்கும். ஏனென்றால் அந்த அளவுக்கு ‘கத்தி’ பிரம்மாண்டமாகவும், வித்தியாசமாகவும் வந்துள்ளது. இதற்கு முழுக் காரணம் விஜய் சாரும், இதனை தயாரித்திருக்கும் ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ தயாரிப்பாளர்கள் சுபாஷ்கரன் மற்றும் கருணாகரன் ஆகியோர்கள்தான். விஜய்யிடம் ‘கத்தி’ பட ஜெகதீஷ் கேரக்டர் பிடிக்குமா? இல்லை இந்தப் படத்தில் வரும் ஜீவானந்தம் மற்றும் கதிரேசன் கேரக்டர் பிடிக்குமா என்று கேட்டால் அவரிடமிருந்து ‘ஜெகதீஷ்’ கேரக்டரை விட எனக்கு கதிரேசன் கேரக்டர்தான் பிடிச்சிருக்கு என்ற பதில்தான் வரும். அவ்வளவு சூப்பராக இந்த கேரக்டர் வந்துள்ளது. சம்பளம் அதிகம் தருவதால்தான் முருகதாஸ் ஹிந்தி, தெலுங்கு படங்களை இயக்குகிறார் என்று சொல்கிறார்கள்! ஆனால் அது உண்மையல்ல! தமிழை விட ஹிந்தி, தெலுங்கில் நான் குறைவான சம்பளமே பெற்றுக் கொள்கிறேன். ஹிந்தி, தெலுங்கு படங்களை நான் இயக்குவதற்கு காரணமே... தமிழ்நாட்டின் ஏதோ ஒரு கிராமத்தில் பிறந்த தமிழனான என்னால் அங்கும் சாதனை செய்து தமிழர்களுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பதற்காகத்தான். மற்றபடி பணத்திற்காக அல்ல!’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தடம் - teaser


;