‘‘கத்தி படம் எடுத்தது எதற்காக?’’ - விஜய் விளக்கம்

‘‘கத்தி படம் எடுத்தது எதற்காக?’’  - விஜய் விளக்கம்

செய்திகள் 19-Sep-2014 9:49 AM IST VRC கருத்துக்கள்

ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் கூட்டணி அமைத்துள்ள ‘கத்தி’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று (செப் 18) மாலை சென்னையிலுள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் நடந்தது. அப்போது விஜய் பேசும்போது,

‘‘பொதுவாக என் படங்களைப் பற்றி நான் பெரிதாக பேசிக் கொள்வதில்லை. ‘கத்தி’ படம் எடுத்தது சண்டை போடுவதற்கு அல்ல! எல்லாத் தரப்பு ரசிகர்களும் சண்டை சச்சரவுகளை மறந்து சந்தோஷமாக படத்தை ரசிக்க வேண்டும் என்பதற்காகத்தான். ‘கத்தி’ படம் என் வாழ்க்கையிலும், முருகதாஸ் வாழ்க்கையிலும் முக்கியமான படமாக இருக்கும். எந்த மக்களுக்கும் ஆதரவாகவோ, எதிராகவே இந்தப் படத்தை எடுக்கவில்லை. என்னை நான் எப்போதும் தியாகி என்று சொல்லிக்கொள்ள மாட்டேன். ஆனால் சத்தியமாக நான் துரோகி கிடையாது. உண்மைக்கு விளக்கம் கொடுத்தால் அது தெளிவாகிவிடும். ஆனால் வதந்திகளுக்கு விளக்கம் கொடுத்தால் அது உண்மையாகிவிடும்’’ என்று விஜய் அர்த்தபூர்வமாக பேசியதும் விழா அரங்கமே கைத்தட்டலால் அதிர்ந்தது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தடம் - teaser


;