‘கத்தி’ - ஃபர்ஸ்ட் லுக் டீஸர் விமர்சனம்

‘கத்தி’ - ஃபர்ஸ்ட் லுக் டீஸர் விமர்சனம்

கட்டுரை 18-Sep-2014 8:38 PM IST Chandru கருத்துக்கள்

‘துப்பாக்கி’ படம் தந்த சூப்பர்ஹிட் சந்தோஷத்தில் ‘கத்தி’க்காக தவம் கிடக்கிறார்கள் இளையதளபதி ரசிகர்கள். ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வந்தபோது பெரிய பரபரப்பை ஏற்படுத்திய ‘கத்தி’ படத்தின் டீஸரும் இப்போது ரிலீஸாகிவிட்டது. ‘துப்பாக்கி’ படத்தின் டீஸர் தந்த அதே உற்சாகத்தை ‘கத்தி’யும் தந்திருக்கிறதா?

மொத்தம் 49 வினாடிகள் ஓடுகிறது இந்த டீஸர். ஆனால், கதையைப் பற்றி ரசிகர்களுக்கு எதுவும் தெரிந்துவிடக்கூடாது என்ற முடிவோடு இதை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். டீஸரின் அறிமுகக் காட்சியிலேயே கத்தியை ஸ்டைலாக சுழற்றியபடி விஜய் அறிமுகமாகவது செம மாஸ். அந்தக் காட்சியின் ஒளிப்பதிவும், லைட்டிங்கும் விஜய் ஸ்டைலுக்கு சூப்பர் கலரைக் கொடுத்திருக்கிறது. முதல் 18 வினாடிகளுக்கு புதிய தீம் மியூசிக்கை கொடுத்திருக்கும் அனிருத், அதன் பின்னர் மோஷன் போஸ்டரில் பயன்படுத்திய அதே தீம் மியூக்கையே ஒலிக்கவிட்டிருக்கிறார். இந்த டீஸரில் விஜய்யின் இரண்டு கேரக்டர்களை காட்டியிருக்கிறார்களா? அல்லது ஒருவரையே காட்டியிருக்கிறார்களா என்பதை அவ்வளவு எளிதில் கணிக்க முடியவில்லை. ஆனால் டீஸரின் இறுதியில் உட்கார்ந்திருக்கும் விஜய்யைப் பார்க்கும்போது அதில் ‘வில்லன் லுக்’ இருப்பதுபோல் தோன்றுகிறது.

மொத்தத்தில்... ‘துப்பாக்கி’யைவிட கொஞ்சம் சுவாரஸ்யம் குறைவாக இருந்தாலும், பெரிய சஸ்பென்ஸைக் கொடுத்திருக்கிறது ‘கத்தி’ டீஸர்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;