‘ஐ ட்யூன்ஸி’ல் ‘ஐ’யை முந்திய ‘கத்தி’!

‘ஐ ட்யூன்ஸி’ல் ‘ஐ’யை முந்திய ‘கத்தி’!

செய்திகள் 18-Sep-2014 5:20 PM IST Chandru கருத்துக்கள்

முன்பெல்லாம் கேசட், சிடி விற்பனைகளின் எண்ணிக்கையை வைத்தே ஒரு படத்தின் மியூசிக்கை மதிப்பிடுவார்கள். தற்போது டெக்னாலஜியின் வளர்ச்சிகேற்ப கேசட்டுகள் வழக்கொழிந்து, ‘சிடி’களின் விற்பனையும் வெகுவாகக் குறைந்துவிட்டது. இன்றைய மாடர்ன் காலத்தில் ‘ஐ ட்யூன்ஸி’ல் தமிழ் மியூசிக் டாப் 10 லிஸ்ட்டில் இடம்பிடிக்கும் படங்களுக்குள்தான் போட்டியே!

கடந்த 15ஆம் தேதி வெளியான ஏ.ஆர்.ரஹ்மானின் ‘ஐ’ பட ஆல்பம் வெளியான ஒருசில மணி நேரங்களிலேயே முதல் இடத்தைப் பிடித்தது. பாடல்களுக்கும் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற நேற்று வரை அப்படம் தொடர்ந்து முதல் இடத்தில் இருந்தது. இந்நிலையில் அனிருத் இசையமைப்பில் உருவாகியிருக்கும் ‘கத்தி’ படத்தின் பாடல்கள் ‘ஐ ட்யூன்ஸி’ல் இன்று விற்பனைக்கு வர, அதற்காகவே காத்திருந்த ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு அதனை ‘டவுன்லோடு’ செய்ய ஆரம்பித்தார்கள். இதனால், ‘டாப் 10 லிஸ்டி’ல் ‘ஐ’ படத்தை இரண்டாம் இடத்திற்குத் தள்ளி ‘கத்தி’ படம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இதில் இன்னொரு முக்கிய விஷயம் என்னவென்றால் அனிருத் இசையமைப்பில் வெளிவந்திருக்கும் 6வது படமும் தொடர்ந்து முதலிடத்தைப் பிடித்திருக்கிறது என்பதுதான். இந்த வெற்றியை முன்னிட்டு ‘கத்தி’யின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸுக்கும், நடிகர் விஜய்க்கும், தன் ரசிகர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்திருக்கிறார் அனிருத்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கரு - டிரைலர்


;