அட்லி - ப்ரியா காதல் மலர்ந்தது எப்படி?

அட்லி - ப்ரியா காதல் மலர்ந்தது எப்படி?

செய்திகள் 18-Sep-2014 4:33 PM IST Top 10 கருத்துக்கள்

கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் ‘ராஜா ராணி’யாகி இருக்கிறார்கள் இயக்குனர் அட்லியும். நடிகை ப்ரியாவும். தங்களுக்குள் காதல் மலர்ந்தது எப்படி என பிரபல வாரஇதழ் ஒன்றிற்கு பேட்டியளித்திருக்கிறது இந்த இளமைக்கூட்டணி!

தனது நண்பரான சிவகார்த்திகேயனை ‘ஜோடி நம்பர் ஒன்’ செட்டில் பார்ப்பதற்காக அடிக்கடி அங்கே அட்லி செல்வது வழக்கமாம். அங்கே வைத்துதான் ப்ரியாவுடன் தனது நட்பை ஆரம்பித்திருக்கிறார் அட்லி. அதன் பிறகு சிவகார்த்திகேயனை வைத்து அட்லி இயக்கிய ‘முகப்புத்தகம்’ எனும் குறும்பட பிரீமியர் ஷோவில் ப்ரியாவின் குடும்பமும், அட்லியின் குடும்பமும் நெருக்கமாகியிருக்கிறார்கள்.

ஒருமுறை அட்லியை சந்தித்த ப்ரியா, தனக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கியிருப்பதாகக் கூற, ப்ரியா மேல் வைத்திருந்த காதலால் அட்லி அவரிடம் ‘என் ஜாதகத்தைக் கொடுக்கவா?’ என்று கேட்டிருக்கிறார். ப்ரியா மனதிலும் அட்லிமேல் ஒரு இனம்புரியாத உணர்வு இருந்ததால் தன் வீட்டில் வந்து பேசும்படி கூறியிருக்கிறார். அதன் பிறகு இருவீட்டாரும் சந்தித்துப் பேச, எல்லாம் சுபமாய் முடிந்திருக்கிறது.

சந்தோஷப் பறவைகளாய் சிறகடித்துக் கொண்டிருக்கும் அட்லியும், ப்ரியாவும் வரும் நவம்பர் மாதம் திருமண செய்யவிருக்கின்றனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நிமிர் - டிரைலர்


;