‘ஐ’ ஆடியோ விழா ஒளிபரப்பு எப்போது?

‘ஐ’ ஆடியோ விழா ஒளிபரப்பு எப்போது?

செய்திகள் 18-Sep-2014 4:00 PM IST Chandru கருத்துக்கள்

செப்டம்பர் 15ஆம் தேதி மொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் கட்டிப்போட்ட ‘ஐ’ படத்தின் ஆடியோ விழாவை நேரில் தரிசிக்க முடியவில்லையே என பலரும் ஏங்கித் தவித்தனர். அந்தக் குறை, வரும் அக்டோபர் 3ஆம் தேதி நிவர்த்தியாகப்போகிறது. ஆம்... அர்னால்ட், ரஜினிகாந்த், புனித் ராஜ்குமார், ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான், விக்ரம், எமி ஜாக்சன், அனிருத், அமலா பால், இயக்குனர் விஜய் உட்பட தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொண்ட பிரம்மாண்டமான ‘ஐ’ படத்தின் ஆடியோ விழாவை ஜெயா டிவி வரும் ஆயுதபூஜை (அக்டோபர் 3) அன்று ஒளிபரப்பவிருக்கிறது.

இந்த அற்புதமான விழாவில், ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக் கச்சேரி, சிங்க முக தோற்றத்துடனான விக்ரம், எமி ஜாக்சனுடன் ஆடிய ‘என்னோடு நீ இருந்தால்...’ பாடல் நடனம், பாடி பில்டர்களின் வித்தியாசமான நிகழ்ச்சி, ‘ஐ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர், ‘ஐ’ படம் உருவாகி விதம் குறித்த வீடியோ என பல சிறப்பம்சங்கள் இடம்பெறவிருக்கின்றன. டோன்ட் மிஸ் இட்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

டிக் டிக் டிக் - டிரைலர்


;