‘கத்தி’ சாட்டிலைட் உரிமை யார் கையில்?

‘கத்தி’ சாட்டிலைட் உரிமை யார் கையில்?

செய்திகள் 18-Sep-2014 11:18 AM IST Chandru கருத்துக்கள்

‘கத்தி’ படம் ஆரம்பித்தபோது பிரச்சனைகள் எதுவும் பெரிதாக முளைக்கவில்லை. ஆனால், நாளாக நாளாக படத்திற்கு ஒவ்வொரு பிரச்சனையாக முளைத்த வண்ணம் இருந்தன. ‘கத்தி’ படத்தின் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ இலங்கை தமிழர்களுக்கு எதிரான நிறுவனம் என்ற குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் வகையில் இரண்டு நாட்களுக்கு முன்பு பத்திரிகையாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார் ‘லைகா’ சுபாஷ்கரன். ஆக... ஒருவழியாக இந்தப் பிரச்சனைக்கு தற்காலி தீர்வு கிடைத்தது. இன்னொருபுறம் ‘கத்தி’ படத்தின் கதை சம்பந்தப்பட்ட வழக்கு ஒன்று உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. அந்த பிரச்சனையும் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.

இந்நிலையில் ‘கத்தி’ படத்தின் சாட்டிலைட் உரிமை எந்த டிவி சேனலுக்கு போகப்போகிறது என்ற பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்தது. கடைசியாக விஜய் நடித்த ‘துப்பாக்கி’ படத்தின் சாட்டிலைட் உரிமையை விஜய் டிவியும், ‘தலைவா’, ‘ஜில்லா’ படங்களின் உரிமையை சன் டிவியும் வாங்கியிருந்தன. தற்போது ‘கத்தி’ படத்தின் சாட்டிலை உரிமையையும் வாங்குவதற்கு முதலில் சன் டிவிதான் போட்டிக் போட்டுக் கொண்டிருந்தது. ஆனால், திடீர் திருப்பமாக தற்போது ‘கத்தி’ படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜெயா டிவி வாங்கியிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து நமக்கு தகவல்கள் கிடைத்திருக்கின்றன. ‘வேலாயுதம்’ படத்தின் உரிமைதான் ஜெயா டிவி வாங்கிய கடைசி விஜய் படம்.

இன்று மாலை சென்னை லீலா பேலஸில் நடைபெறவிருக்கும் ‘கத்தி’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பத்திரிகை நிருபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாம். வீடியோகிராஃபர், போட்டோகிராஃபர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லையாம். ‘கத்தி’ இசை விழா முழுவதையும் ஜெயா டிவியே கவர் செய்து நிகழ்ச்சியாக வழங்கத் திட்டமிட்டுள்ளதாம்.

‘ஐ’ படத்தின் உரிமையையும் வாங்கியிருக்கும் ஜெயா டிவி, அந்த இசை விழாவையும் ஒளிபரப்பத் திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தடம் - teaser


;