சத்தமில்லாமல் விஜய் செய்த 25 லட்ச ரூபாய் நிதியுதவி!

சத்தமில்லாமல் விஜய் செய்த 25 லட்ச ரூபாய் நிதியுதவி!

செய்திகள் 18-Sep-2014 9:59 AM IST Chandru கருத்துக்கள்

திரையுலக நட்சத்திரங்கள் பெரும்பாலும் தாங்கள் செய்யும் உதவிகளை வெளியில் அதிகமாக சொல்லிக்கொள்வதில்லை. ஆனாலும், எப்படியோ விஷயம் வெளியில் வந்துவிடும். அந்தவகையில் சமீபத்தில் நடிகர் விஜய் இயக்குனர்கள் சங்கத்திற்காக 25 லட்ச ரூபாயை நிதியுதவியாக சத்தமில்லாமல் வழங்கியிருக்கிறார். இத்தனைக்கும் இயக்குனர் சங்கத்திலிருந்து எந்தவித கோரிக்கையும் விஜய்யிடம் வைக்கப்படவில்லையாம். உதவி இயக்குனர்கள் சம்பளப் பிரச்சனை உட்பட பல பிரச்சனைகளில் இயக்குனர்கள் சங்கம் இயங்கி வருவதை கேள்விப்பட்ட விஜய், தானாகவே முன்வந்து இந்த நிதியுதவியை வழங்கியுள்ளார் என பிரபல இயக்குனர் ஒருவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;