புறம்போக்கு: ‘எம லிங்கம்’ விஜய்சேதுபதி, ‘மெக்காலே’ ஷாம்!

புறம்போக்கு: ‘எம லிங்கம்’ விஜய்சேதுபதி, ‘மெக்காலே’ ஷாம்!

செய்திகள் 18-Sep-2014 9:54 AM IST Chandru கருத்துக்கள்

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம், கார்த்திகா நடிக்கும் ‘புறம்போக்கு’ படத்தின் டைட்டிலை இப்போது ‘புறம்போக்கு என்கிற பொதுவுடைமை’ என்று மாற்றியிருக்கிறார்கள். சிறைச்சாலைக்குள் நடக்கும் முக்கிய விஷயங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வரும் இப்படத்தில் ஆர்யாவின் கேரக்டர் பெயர் பாலுவாம். நிஜத்தில் இந்த பாலு என்பவர் போலீஸாக இருந்து, தெலுங்கானா மக்களுக்காக குரல் கொடுத்து, சிறையில் அடைக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டவராம். அவர் நினைவாகத்தான் ஆர்யாவின் கதாபாத்திரத்திற்கு ‘பாலு’ என்ற பெயரை வைத்திருக்கிறார் எஸ்.பி.ஜனநாதன். அதேபோல் வீரமங்கை வேலுநாச்சியாரின் படைத்தளபதியான ‘குயிலி’ என்பவரின் பெயரை, தனது படத்தில் நடிக்கும் கார்த்திகாவிற்கு சூட்டியிருக்கிறார் இயக்குனர். விஜய் சேதுபதியின் கேரக்டர் பெயர் எமலிங்கமாம். இந்திய கல்வித்துறை திட்டத்தையும், தண்டனைச் சட்டத்தையும் வடிவமைத்த ‘மெக்காலே’வின் பெயரை ஷாமுக்கு சூட்டியிருக்கிறார்கள். இப்படி படத்தில் வரும் ஒவ்வொரு முக்கிய கதாபாத்திரங்களுக்கும் நிஜ வாழ்வில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்தவர்களின் பெயர்களை சூட்டியிருக்கிறாராம் எஸ்.பி.ஜனநாதன்.

இப்படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியை தற்போது சிறை செட் ஒன்றில் படமாக்கி வருகிறார்கள். யுடிவி மோஷன் பிக்சர்ஸ் இப்படத்தை பிரம்மாண்டமாய் தயாரிக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் மோஷன் போஸ்டர்


;