அடேங்கப்பா... 45 மணி நேரத்தில் 25 லட்சம்!

அடேங்கப்பா... 45 மணி நேரத்தில் 25 லட்சம்!

செய்திகள் 17-Sep-2014 4:30 PM IST Chandru கருத்துக்கள்

‘ஐ’ டீஸர் வந்தாலும் வந்தது ‘யு டியூப்’பே ‘மெர்சல்’ ஆகும் அளவுக்கு அதனைக் கண்டுகளித்து வருகின்றனர் ரசிகர்கள். செப்டம்பர் 15ஆம் தேதி நடைபெற்ற ஆடியோ விழாவைத் தொடர்ந்து அன்று இரவு 8 மணிக்கு ‘ஐ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் ‘யு டியூப்’பில் வெளியிடப்பட்டது. பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய இந்த டீஸரை முதல் 12 மணி நேரத்திற்குள் 10 லட்சம் ரசிகர்கள் கண்டுகளித்து தமிழ் சினிமாவில் புதிய சாதனையை நிகழ்த்தினார்கள். இப்போது இன்னொரு சாதனையைச் செய்திருக்கிறார் இந்த ‘ஐ’ டீஸர். அதாவது, இப்போது 45 மணி நேரத்தில் 25 லட்சம் பார்வையாளர்கள் எண்ணிக்கையைத் தொட்டிருக்கிறது. இதுவரை எந்த தமிழ் சினிமாவும் இவ்வளவு நேரத்தில் இப்படி ஒரு சாதனையை நிகழ்த்தியதில்லை. இன்னும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் முந்தைய ‘ரெக்கார்டு’கள் பல உடைக்கப்படலாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பஞ்சுமிட்டாய் - டிரைலர்


;