செப்டம்பர் 26ல் கிரிக்கெட் VS ஃபுட்பால்!

செப்டம்பர் 26ல் கிரிக்கெட் VS ஃபுட்பால்!

செய்திகள் 17-Sep-2014 4:12 PM IST Chandru கருத்துக்கள்

சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு, ஸ்ரீதிவ்யா நடித்திருக்கும் ‘ஜீவா’ படத்தின் சென்சார் காட்சியைப் பார்த்துவிட்டு, அப்படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள் சென்சார் அதிகாரிகள். இப்படம் வரும் 26ஆம் தேதி ரிலீஸாகவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். ஆர்யாவும், விஷாலும் இணைந்து இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறார்கள். கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இப்படம் ரிலீஸாகும் அதே நாளில் வெளியாவதற்கு ஏற்கெனவே களத்தில் குதித்திருக்கிறது கார்த்தியின் ‘மெட்ராஸ்’. ‘அட்டகத்தி’ ரஞ்சித் இயக்கியிருக்கும் இப்படத்தில் கார்த்தி வடசென்னை ஃபுட்பால் பிளேயராக நடித்திருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் பாடல்கள் சூப்பர்ஹிட்டாகியிருக்கும் இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருக்கிறது. யு/ஏ சான்றிதழ் வாங்கியிருக்கும் இப்படத்தை ‘ட்ரீம் ஃபேக்டரி’ நிறுவனம் உலகமெங்கும் வெளியிடுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இப்படை வெல்லும் - ஆடியோ பாடல்கள்


;