ரஜினி பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய படம்!

ரஜினி பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய படம்!

செய்திகள் 17-Sep-2014 3:21 PM IST Chandru கருத்துக்கள்

‘லிங்கா’ படத்தில் பிஸியாக இருக்கும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஹிந்தியில் வெளிவரவிக்கும் ‘மே ஹூன் ரஜினிகாந்த்’ என்ற படத்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்து தடை உத்தரவு வாங்கியிருக்கிறாராம். வர்ஷா புரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் ரஜினிகாந்த் சார்பாக வழக்கு ஒன்று தொடரப்பட்டது. ரஜினியின் அந்த மனுவில் ‘‘மே ஹூன் ரஜினிகாந்த் படத்தில் தனது பெயரை அனுமதியின்றி பயன்படுத்தியிருப்பதாகவும், தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் காட்சிகள் இருப்பதாக சந்தேகப்படுவதாகவும், எனவே படத்தை தடை செய்ய வேண்டும்’’ என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி இப்படத்தை வெளியிடுவதற்கு இடைக்காலத் தடை விதிக்க உத்தரவிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘‘அரசியலில் ரஜினியைவிட கமலுக்கே என் ஆதரவு!’’ - நடிகர் ஆர்.கே.சுரேஷ்


;