‘ஜெய்ஹிந்த் 2’ விழாவில் உருக்கமாக பேசிய பாலா!

‘ஜெய்ஹிந்த் 2’ விழாவில் உருக்கமாக பேசிய பாலா!

செய்திகள் 17-Sep-2014 1:20 PM IST VRC கருத்துக்கள்

நாட்டுப்பற்று மிக்க பல படங்களை இயக்கி, தயாரித்து, நடித்த அர்ஜுனின் அடுத்த படைப்பு ‘ஜெய்ஹிரந்ந் 2’. விரைவில் ரிலீசாகவிருக்கும் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று காலை சென்னையிலுள்ள சத்யம் தியேட்டரில் நடந்தது. இது ஒரு வழக்கான ஆடியோ வெளியீட்டு விழா இல்லாமல், அர்ஜுனுக்கு நம் நாடு மீதிருக்கும் பற்றை மேலும் எடுத்துக் காட்டும் விதமான ஒரு விழாவாக அமைந்தது. நம் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களது குடும்பத்தினரை இந்த விழாவுக்கு அழைத்து வந்து அவர்களை மேடையில் கௌரவப்படுத்தியது தான்! இந்த நிகழ்ச்சி விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் நெகிழ வைத்த்து!

இதனை தொடர்ந்து இப்படத்தின் ஆடியோவை வெளியிட்டு பேசிய இயக்குனர் பாலா, ‘‘அர்ஜுன் பேசும்போது தான் இராணுவத்தில் சேர ஆசைப்பட்டதாகவும் அதற்கான அப்ளிகேஷ்னில் அவரது அம்மா கையழுத்து போட மறுத்துவிட்டதால் இராணுவத்தில் சேர முடியவில்லை என்றும் குறிப்பிட்டார். அப்போது அர்ஜுனின் அம்மா அந்த அப்ளிகேஷனில் கையெழுத்துப் போட்டிருக்க வேண்டும்! அப்படி அவர் கையெழுத்துப் போட்டிருந்தால் இன்று நம் நாட்டுக்கு ரியலான ஒரு இராணுவ ஆக்‌ஷன் கிங் கிடைத்திருப்பார். அர்ஜுன் எதையும் நேர்மையாக, வித்தியாசமாக செய்பவர். அதற்கு உதாரணம் தான் மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு செய்துள்ள இந்த மரியாதை! நான் எந்த ஒரு நடிகர், நடிகைகளுடனும் புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆசைப்படாதவன்! ஆனால் இந்த விழாவில் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களது குடும்பத்தினருடன் ஒரு புகைப்படத்தை எடுத்துக் கொள்வதில் பெருமைப்படுகிறேன்’’ என்று கூறி அவர்களுடன் ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்தார் பாலா!

அர்ஜுன் பேசும்போது, ‘‘இது என்னோட இயக்கத்தில் வருகிற 10ஆவது படம். என்னால் முடிந்த வரையில் ஒவ்வொரு படத்திலும் நாட்டுக்கு தேவையான நல்ல கருத்துக்களைச் சொல்லி வருகிறேன். இந்தப் படத்தில் இன்றைய கல்வி முறையை நாட்டுப்பற்று மற்றும் ஆக்‌ஷன் கலந்து சொல்லியிருக்கிறேன். கல்வி இப்படி இருந்தால் ஏழைகளுக்கும் தரமான கல்வி கிடைக்கும் என்ற பொதுவான ஒருவனின் கருத்தைக் கொண்ட படம் தான் இது. ஒவ்வொரு பெற்றோரின் ஆசையும் தங்களது வாரிசுகள் நல்ல கல்வியை பெற வேண்டும் என்பதே. ஆனால் அந்த கனவு எப்படியெல்லாம் சிதைக்கப்படுகிறது என்பதை இப்பட்த்தில் சொல்லி இருக்கிறேன்’’ என்றார்.
இதனை தொடர்ந்து ‘கலைப்புலி’ எஸ்.தாணு, மனோபாலா, மயில்சாமி மற்றும் பலர் அர்ஜுனையும், படத்தை பற்றியும் வாழ்த்திப் பேசினர்.

அர்ஜுன் கதை, திரைக்கதை எழுதி, இயக்கி தயாரித்து, நடித்துள்ள இப்படத்தில் அர்ஜுனுக்கு ஜோடியாக சிம்ரன் கபூர், சுவின் சாவ்லா என இரு கதாநாயகிகள் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ராகுல் தேவ், பிரம்மானந்தம், ரவிகாளே, அதுல் மாதூர், மயில்சாமி, மனோபாலா வினய பிரசாத், நரசிம்ம ராஜு, பேபி யுனிதா என ஏராளமானோர் நடித்திருக்கிறார்கள்.

கன்னடத்தில் புகழ்பெற்ற இசை அமைபாளரான தமிழகத்தை சேர்ந்த அர்ஜுன் ஜெனியா இப்படத்தின் மூலம் தமிழில் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார். இப்படத்தின் ஒளிப்பதிவு பொறுப்பை எச்.சி.வேணுகோபால் கவனித்திருக்க, பாடல்களை வைரமுத்து, பா.விஜய் முதலானோர் எழுதியிருக்கிறார்கள். தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எச்சரிக்கை - டிரைலர்


;