‘காமெடியனு’க்கு குட்பை சொல்கிறாரா சந்தானம்?

‘காமெடியனு’க்கு குட்பை சொல்கிறாரா சந்தானம்?

செய்திகள் 17-Sep-2014 11:31 AM IST Chandru கருத்துக்கள்

தமிழ்சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு காமெடியன் கோலோச்சிக் கொண்டிருப்பர். அந்த வரிசையில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்து வெற்றிகரமான காமெடியனாக வலம் வந்தவர் சந்தானம். பத்து வருடங்களாக கமலைத் தவிர்த்த மற்ற அனைத்து முன்னணி நடிகர்களுடனும் கூட்டணி அமைத்துவிட்ட சந்தானம், விரைவில் அவருடனும் நடித்துவிடுவார் என நம்பலாம்.

காமெடிக் களத்தில் கிட்டத்தட்ட தான் நினைத்ததை சாதித்துவிட்ட சந்தானம், ஹீரோ ஏரியாவையும் ஒரு கை பார்க்க களத்தில் குதித்த படம்தான் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’. இப்படம் வசூல் ரீதியாக அவருக்கு வெற்றியாக அமைய, தற்போது ஹீரோவாக தனது இரண்டாவது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் சந்தானம். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை சந்தானத்தின் நண்பரான சேது என்பவர் இயக்குகிறார். தனது முந்தைய படத்தின் நாயகி ஆஸ்னா ஜவேரியே இப்படத்திலும் அவருக்கு ஜோடியாகி இருக்கிறார். ரொமான்ஸ் காமெடித் திரைப்படமாக உருவாகும் இப்படத்திற்கான படப்பிடிப்பு கடந்த இரண்டு வாரங்களாக பாண்டிச்சேரியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தற்போது சந்தானம் ஏற்கெனவே காமெடியனாக நடித்துமுடித்த படங்கள் மட்டுமே வெளியாகிக் கொண்டிருக்கின்றன. தற்போது ‘லிங்கா’ படத்தில் ரஜினியுடனும், ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படத்திலும் மட்டுமே காமெடியனாக நடிக்கிறார். இனி அவர் நடிப்பில் உருவாகும் படங்களில் அவர் ஹீரோவாகவே நடிப்பார் என்றுதான் தோன்றுகிறது. சமீபத்திய விழா ஒன்றில் சூர்யா முன்னிலையில் ‘‘அண்ணனுக்கு முன்னாடிலாம் நான் என்னைக்குமே காமெடியன்தான்’’ என்று சந்தானம் பேசியிருந்தாலும், அதற்கான சாத்தியக்கூறுகள் அமைவது இனி கஷ்டம்தான்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சக்க போடு போடு ராஜா - டிரைலர்


;