ஹன்சிகாவுக்கு முதல் படம் ‘மங்காத்தா’தானாம்!

ஹன்சிகாவுக்கு முதல் படம் ‘மங்காத்தா’தானாம்!

செய்திகள் 17-Sep-2014 11:18 AM IST Chandru கருத்துக்கள்

என்னடா இது வம்பா போச்சு... ஹன்சிகாவுக்கும் ‘மங்காத்தா’வுக்கும் என்ன சம்பந்தம் என யோசிக்கிறீர்களா? நீங்க நெனைச்சது சரிதான்... அந்தப் படத்துக்கும் இவங்களுக்கும் நேரடியா எந்தத் தொடர்பும் இல்லைதான். ஆனால், சமீபத்தில் தமிழ் பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள ஹன்சிகா ‘மங்காத்தா’ பற்றி கூறியிருப்பதுதான், இந்த தலைப்புக்கான காரணம். அந்தப் பேட்டியில் அவரிடம், ‘‘நீங்கள் விஜய், சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துவிட்டீர்கள்? அஜித்துடன் எப்போது?’’ என்று கேட்க, அதற்கு ஹன்சிகா ‘‘நான் முதன்முதலில் பார்த்த தமிழ்ப்படம் ‘மங்காத்தா’தான். அப்படத்தைப் பார்த்த உடனே நான் அஜித் சாரின் மிகப்பெரிய ரசிகையாகிவிட்டேன். அவர் நடிக்கும் படத்தில் நானும் நடிப்பதற்கு எப்போது வாய்ப்புக் கிடைக்கும் என காத்துக் கொண்டிருக்கிறேன்’’ என்று கூறியிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் மோஷன் போஸ்டர்


;