‘ஐ’ விழாவிற்கு சுரேஷ் கோபி வராதது ஏன்?

‘ஐ’ விழாவிற்கு சுரேஷ் கோபி வராதது ஏன்?

செய்திகள் 17-Sep-2014 10:43 AM IST Chandru கருத்துக்கள்

செப்டம்பர் 15ஆம் தேதி நேரு உள் விளையாட்டரங்கில் ‘ஐ’ படத்தின் ஆடியோ விழா சில குறைகளுடன் தொடங்கி பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ஹாலிவுட்டிலிருந்து வந்த அர்னால்ட், நேரமின்மை காரணமாக விழா முடியும் முன்பே கிளம்பிச் சென்றது ஒரு புறம் சர்ச்சையைக் கிளப்பியதென்றால், ‘ஐ’ படத்தின் முக்கிய வில்லன் என்ற கூறப்பட்ட மலையாள நடிகர் சுரேஷ் கோபி வராதது இன்னொருபுறம் பலவிதமான கேள்விகளை எழுப்பியுள்ளது.

புகழ்பெற்ற மலையாள நடிகரும், தேசிய விருதை வென்றவருமான சுரேஷ் கோபி, அஜித் நடித்த ‘தீனா’ உட்பட ஒரு சில தமிழ்ப் படங்களில் நடித்திருக்கிறார். நீண்டநாட்களுக்குப் பிறகு அவர் மீண்டும் தமிழில் ஷங்கர் இயக்கத்தில் ‘ஐ’ படத்தில் வில்லனாக நடிக்கிறார் என்றதும் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால், நடந்து முடிந்த இசை வெளியீட்டு விழாவில் அவர் பங்கு பெறாததும், ‘ஐ’ டீஸரில் சுரேஷ்கோபி சம்பந்தப்பட்ட ஒரு காட்சிகூட இடம்பெறாததும் பல கேள்விகளை கிளப்பியுள்ளன.

இதுகுறித்து மலையாள பத்திரிகைகளில் பலவிதமாக எழுதி வருகின்றனர். ஒரு சிலர், படப்பிடிப்பு நடந்தபோதே சுரேஷ் கோபிக்கும் ‘ஐ’ தயாரிப்புத் தரப்புக்கும் இடையே சிற்சில பிரச்சனைகள் இருந்ததால்தான், இந்த விழாவிற்கு அவர் அழைக்கப்படவில்லை என எழுதியிருக்கின்றன. இன்னும் சில பத்திரிகைகள், சுரேஷ்கோபி கொடுத்த கால்ஷீட்டை இயக்குனர் ஷங்கர் சரியான முறையில் பயன்படுத்தவில்லை என்பதால்தான் அவர் இவ்விழாவில் கலந்துகொள்ளவில்லை எனவும் எழுதியிருக்கின்றன.

ஆனால், இது எல்லாவற்றையும்விட சுரேஷ்கோபிக்கு செப்டம்பர் 15ஆம் தேதி தவிர்க்க முடியாத படப்பிடிப்பு வேலைகள் இருந்ததால்தான் அவரால் அந்த விழாவில் கலந்துகொள்ளமுடியவில்லை என்றும், அவரின் கதாபாத்திரம் மிக முக்கியமானதாக இருப்பதால்தான் ‘ஐ’ டீஸரில் அவரைக் காட்டாமல் ஷங்கர் சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார் என்றும் ஒருசிலர் கூறுவதையும் ஏற்கத்தான் வேண்டியிருக்கிறது.

‘ஐ’ படத்தின் முழுநீள டிரைலர் வரும்போது இதற்கான விடை கண்டிப்பாக கிடைக்கும்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - நானா thaana பாடல் வீடியோ


;