‘கத்தி’ பாடல்கள் பற்றி சிம்பு செய்த ட்வீட்!

‘கத்தி’ பாடல்கள் பற்றி சிம்பு செய்த ட்வீட்!

செய்திகள் 17-Sep-2014 10:11 AM IST Chandru கருத்துக்கள்

தான் ஒரு அஜித் ரசிகர் என்பதை எந்த இடத்திலும் மறைக்காமல் வெளிப்படுத்தக்கூடியவர் சிம்பு. ஆனாலும் தனக்கு விஜய்யும் நண்பர்தான் என்பதையும் பேட்டிகளில் இதுவரை குறிப்பிட்டே வந்திருக்கிறார். இப்போது சிம்பு செய்திருக்கும் ஒரு ‘ட்வீட்’டும் அதை உறுதிப்படுத்தியிருக்கிறது. நாளை (செப் 18) ‘கத்தி’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை லீலா பேலஸில் வெகு சிறப்பாக நடைபெறவிருக்கிறது. அனிருத்தும் சிம்புவும் நண்பர்கள் என்பதால், ‘கத்தி’ படத்தின் பாடல்களை சிம்புவிற்கு போட்டுக் காட்டியுள்ளார் அனிருத். பாடல்களைக் கேட்டு ரொம்பவே குஷியான சிம்பு, ‘கத்தி’ பாடல்கள் சூப்பராக வந்திருப்பதாகவும், அனிருத் பின்னியிருக்கிறார் என்றும், கத்தி டீமுக்கு என் வாழ்த்துக்கள் எனவும் ‘ட்வீட்’ செய்திருக்கிறார்.

மேலும் இன்னுமொரு ட்வீட்டில் ‘‘அனிருத்... உன்ன நினைச்சா சந்தோஷமா இருக்குடா... எல்லா பாட்டும் சூப்பரா இருக்கு... குறிப்பா ‘செஃல்பி புள்ள...’ சூப்பர்!. வாழ்த்துகள்!’’ என்றும் மற்றொரு ட்வீட்டில் ‘‘தலைவா விஜய்... (ட்வீட் டேக்) தல ஃபேன்தான்... ஆனா தலைக்கனம் இல்லாத ஃபேன்!’’ என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தடம் - teaser


;