900 கோடி ரூபாயில் உருவாகும் அமிதாப் - ஜாக்கி படம்!

900 கோடி ரூபாயில் உருவாகும் அமிதாப் - ஜாக்கி படம்!

செய்திகள் 17-Sep-2014 9:54 AM IST Chandru கருத்துக்கள்

பாலிவுட்டின் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனும், ஆசியாவின் சூப்பர்ஸ்டார் ஜாக்கி சானும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். இப்படத்திற்கு ‘கோல்டு ஸ்ட்ரக்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் முதல் முறையாக இந்திய -& சீனா கூட்டுத் தயாரிப்பில் உருவாகி வருகிறது. இப்படத்தில் அமிதாப், ஜாக்கிசானுடன் அபய் தியோலும், ஜாகுலின் ஃபெர்னான்டஸும் நடிக்கிறார்கள். ‘டிரங்கன் மாஸ்டர்’ படத்தின் மூலம் உலகப் புகழ்பெற்ற டோனி சியுங் &- கோரி யேன் இணைந்து இப்படத்தை இயக்குகிறார்கள். கிட்டத்தட்ட 150 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 900 கோடி ரூபாய்) செலவில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு சீனா, இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெறவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.0 மேக்கிங் - வீடியோ


;