‘‘கத்தியின் பட்ஜெட் என் 2 நாள் வருமானம்தான்!’’ - சுபாஷ்கரன்

‘‘கத்தியின் பட்ஜெட் என் 2 நாள் வருமானம்தான்!’’ - சுபாஷ்கரன்

செய்திகள் 16-Sep-2014 2:55 PM IST Chandru கருத்துக்கள்

சற்று நேரத்திற்கு முன்பு ‘கத்தி’ படம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குறித்தும், படத்தின் ரிலீஸ் குறித்தும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவன தயாரிப்பாளர் சுபாஷ்கரன் உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் பத்திரிகையாளர்களைச் சந்தித்து விளக்கம் கொடுத்தனர். அப்போது பேசிய சுபாஷ்கரன், ‘‘கத்தி படத்தை ராஜபக்ஷே தயாரிக்க வேண்டிய அவசியமே இல்லை. மேலும் கத்தி படத்தின் பட்ஜெட்டிற்கு என் 2 நாள் வருமானமே போதும். சில இயக்கங்கள் தங்களின் சொந்த பப்ளிசிட்டிக்காக ‘கத்தி’ படத்திற்கு தேவையில்லாத எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். ‘கத்தி’ படம் யாருக்கும் கைமாற்றிக் கொடுக்கப்போவதில்லை என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். வரும் 18ஆம் தேதி இசை வெளியீட்டையும், திட்டமிட்டபடி படத்தை தீபாவளிக்கும் ரிலீஸ் செய்வோம். இதனால் பிரச்சனைகள் ஏதாவது எழுந்தால், அதை நாங்கள் சட்டரீதியாக எதிர்கொள்வோம். இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு நாங்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்திருக்கிறோம். இதேபோல் இங்குள்ள தமிழர்களுக்கும் நாங்கள் உதவிகளைச் செய்யத் தயாராக இருக்கிறோம். நான் ஒரு தமிழன் எனவேதான் தமிழில் படம் செய்ய வேண்டும் என்ற ஆசையில் ‘கத்தி’ படத்தை தயாரித்துள்ளேன். இனி ஹிந்தியிலும் படம் தயாரிக்கும் எண்ணமும் இருக்கிறது. ‘கத்தி’ சம்பந்தமாக எந்த இயக்கத்தையும் சந்தித்து எங்களது விளக்கங்களைக் கூற தயாராக இருக்கிறோம்!’’ என்று கூறினார்.

அவரின் விளக்கத்திலிருந்து ‘கத்தி’ தீபாவளிக்கு ரிலீஸாவது உறுதியாகியிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கரு - டிரைலர்


;