அப்போலோ மருத்துவமனையில் கமல்!

அப்போலோ மருத்துவமனையில் கமல்!

செய்திகள் 16-Sep-2014 1:52 PM IST Chandru கருத்துக்கள்

சமீபகாலமாக திரையுலக பிரபலங்கள் பலரும் ‘ஃபுட் பாய்சன்’ காரணமாக அவதிப்பட்டு வருகின்றனர். சில வாரங்களுக்கு முன்பு நடிகர் கார்த்தி, சில நாட்களுக்கு முன்பு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்.... தற்போது இதே பிரச்சனை காரணமாக உலகநாயகன் கமல்ஹாசனும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறாராம். இதுகுறித்து ட்வீட்டில் குறிப்பிட்டுள்ள கமலின் பிஆர்ஓ நிகில் முருகன், ‘‘ஃபுட் பாய்சன் காரணமாக உலகநாயகன் கமல்ஹாசன் க்ரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். கவலைப்படுவதற்கு எதுவுமில்லை. இன்று மாலையோ அல்லது நாளை காலையிலேயே மருத்துமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். நாளை முதல் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்!’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.


உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;