12 மணி நேரத்தில் ரஜினி, அஜித், விஜய்யை முந்திய விக்ரம்!

12 மணி நேரத்தில் ரஜினி, அஜித், விஜய்யை முந்திய விக்ரம்!

செய்திகள் 16-Sep-2014 11:02 AM IST Chandru கருத்துக்கள்

நேற்று 8 மணிக்கு ‘யு டியூப்’ முன்பு தவமாய் தவமிருந்தார்கள் உலகெங்கிலும் இருக்கும் தமிழ் சினிமா ரசிகர்கள். ஆம்... அந்த நேரம்தான் ‘ஐ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் வெளியாகப்போவதாக முன்பே அறிவித்திருந்தனர். திட்டமிட்டபடி சரியாக அதே நேரத்தில் டீஸர் வெளியாக, ‘யு டியூப்’பே டிராபிக்கில் சிக்கித் தவிக்கும் அளவுக்கு அந்த டீஸரை ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கண்டுகளித்தனர். இப்போது வரை அந்த டீஸரைப் பார்த்து, ‘லைக்’ செய்து, ஷேர் செய்து வருகின்றனர். விக்ரமின் கடுமையான உழைப்பும், உலகத்தர மேக்அப்பும், இந்தியாவின் உச்சபட்ச கிராபிக்ஸும் சேர்ந்து உருவாக்கப்பட்ட இந்த ‘ஐ’ டீஸர், ரசிகர்களின் ஏகோபித்த எதிர்பார்ப்புக்கு எந்தக்குறையும் வைக்கவில்லை.

டீஸரை ‘யு டியூப்’பில் பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு படத்திற்கும் முக்கிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை அஜித்தின் ‘பில்லா 2’ முதன்முதலாக ஒரே நாளில் 10 லட்சம் பார்வையாளர்களைக் கடந்தது. அதன் பிறகு விஜய் நடித்த ‘தலைவா’ படத்தின் டீஸரை அதற்கும் குறைவான நேரத்திற்குள் 10 லட்சம் ரசிகர்கள் கண்டுகளித்தனர். அதன்பிறகு இந்தியாவின் முதல் மோஷன் கேப்சர் அனிமோஷன் படமான ரஜினியின் ‘கோச்சடையான்’ படத்தையும் ஒரே நாளில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் கண்டுகளித்தனர். ஆனால், இந்தப் படங்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளி, வெறும் 12 மணி நேரத்திலேயே ‘ஐ’ டீஸரை இதுவரை 10 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்டுகளித்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் பல மடங்கு உயர வாய்ப்பிருக்கிறது.

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை இதுவரை ரஜினின் ‘கோச்சடையான்’ படத்தின் டீஸர் மட்டுமே 50 லட்சத்திற்கும் அதிகமான ‘யு டியூப்’ பார்வையாளர் எண்ணிக்கையைப் பெற்றுள்ளது. இந்த சாதனையை ‘ஐ’ முறியடிக்கும் என அடித்துக்கூறுகிறார்கள் ‘ஐ’ விக்ரம் ரசிகர்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மேயாத மான் - தங்கச்சி பாடல் வீடியோ


;