‘ஐ’ விழாவில் நடனமாடி அசத்திய ரஹ்மானின் மனைவி!

‘ஐ’ விழாவில் நடனமாடி அசத்திய ரஹ்மானின் மனைவி!

செய்திகள் 16-Sep-2014 10:30 AM IST VRC கருத்துக்கள்

நேற்றைய ‘ஐ’ ஆடியோ விழாவில் பெரும்பாலான விஷயங்கள் ரசிகர்களுக்கு காணக்கிடைக்காத அரிய காட்சியாகவே இருந்தன. ‘ஐ’ இசை விழாவின் முக்கிய நாயகனான ஏ.ஆர்.ரஹ்மான் தன் குழுவினருடன் விழா மேடையில் பல பாடல்களைப் பாடி அசத்தினார். ஷங்கரின் இரண்டாவது படமான ‘காதலன்’ படத்தில் சூப்பர்ஹிட்டான ‘ஊர்வசி... ஊர்வசி...’ பாடலோடு தனது நிகழ்ச்சியைத் தொடங்கிய ஏ.ஆர்.ரஹ்மான், அதன் பிறகு சுரேஷ் பீட்டருடன் இணைந்து ‘முகாபுலா...’ ‘பேட்ட ராப்...’ ‘ஷக்கலக்க பேபி...’, ‘எனக்கொரு கேர்ள் ஃபிரன்ட்...’ ‘இரும்பிலே ஒரு இதயம்...’ உட்பட பல பாடல்களைத் தந்து அசத்தினார். கடைசியாக ஏ.ஆர்.ரஹ்மான் ‘எந்திரன்’ படப் பாடலுக்கு இசையமைத்துப் பாடியபோது, அந்தப் பாடலுக்கு ரஹ்மானின் மனைவி சாய்ரா பானு நடனமாடத் தொடங்க, அதுநாள் வரை அவரை அமைதியாகவே பார்த்துவந்த ரசிகர்களுக்கு அந்தக் காட்சியைப் பார்த்ததும் பெரும் சந்தோஷத்தையும் ஆச்சரியத்தையும் தந்தது. இதனால் அவரின் நடனத்திற்கு தங்களது ஆதரவையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்துவதுபோல் கைதட்டி, விசில் அடித்து மகிழ்ந்தனர் ரசிகர்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தெரு நாய்கள் - டிரைலர்


;