ஷங்கர் இயக்கத்தில் நடிக்கும் அர்னால்ட்?

ஷங்கர் இயக்கத்தில் நடிக்கும் அர்னால்ட்?

செய்திகள் 16-Sep-2014 10:02 AM IST VRC கருத்துக்கள்

‘ஐ’ ஆடியோ விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சென்னை மக்களை சந்தோஷத்தில் ஆழ்த்திய அர்னால்ட், விழா நடந்து கொண்டிருக்கும்போதே நேரமின்மை காரணமாக கிளம்பிவிட்டார். ஆனாலும், அவரிருந்த அந்த நேரத்தில் ‘ஐ’ விழாவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை கைதட்டி ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.

விழாவின் ஒரு பகுதியாக ஹாலிவுட்டின் ஆணழகனான அர்னால்டையே பிரமிக்க வைக்கும் வகையில் மேடையில் 11 ஆணழகர்கள் தோன்றி இசைக்கேற்ப தங்களது உடல் வலிமையைக் காட்டி அசத்தினர். இதைப் பார்த்து ரசித்த அர்னால்ட், தன் இருக்கையில் இருந்து இறங்கி வந்து அந்த ஆணழகர்களைப் பாராட்டி, அவர்களுடன் புகைப்படத்துக்கும் போஸ் கொடுத்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. அதன் பிறகு அர்னால்ட் பேசும்போது,

‘‘இந்த நிகழ்ச்சி என் கடந்த காலங்களை நினைவுக்குக் கொண்டு வந்தது. நானும் இவர்களைப்போல ஆணழகனாக இருந்து கதாநாயகனாக நடிக்க வந்தவன் தான். நான் சென்னைக்கு வந்தது ‘ஐ’ விழாவில் கலந்து கொள்வதற்காக மட்டும் அல்ல! டைரக்டர் ஷங்கரிடம் வேலை கேட்டு வந்ததாக நினைத்துக் கொள்ளுங்கள். (ஷங்கரைப் பார்த்து) என்னை வைத்து நீங்கள் எப்போது படம் எடுக்கப் போகிறீர்கள்? நான் உங்கள் இயக்கத்தில் நடிக்க தயார்’’ என்று அர்னால்ட் பேசியதும், விழா அரங்கமே கரவொலியால் அதிர்ந்தது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கூட்டாளி - டிரைலர்


;