வெளியில் தலைகாட்டப் பயந்த விக்ரம்!

வெளியில் தலைகாட்டப் பயந்த விக்ரம்!

செய்திகள் 16-Sep-2014 10:01 AM IST VRC கருத்துக்கள்

நேற்றைய ‘ஐ’ விழாவின் நாயகன் விக்ரம், மொத்த இந்தியாவையும் மிரட்டிவிட்டார். ஒரு படத்திற்கு ஒரு நடிகர் இத்தனை கஷ்டப்படவும் முடியுமா என எண்ணும் வகையில் அமைந்திருந்தது அவருடைய ‘ஐ’ படத்தின் தோற்றங்கள். விழாவில் ‘நீ என்னோடு இருந்தால்...’ என்ற பாடலுக்கு மேடையில் எமி ஜாக்ஸனுடன் ஆடிய விக்ரம், ‘ஐ’ படத்தின் கெட்அப்பான சிங்கமுக தோற்றத்திலேயே வந்திருந்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. விழாவில் ஹீரோ விக்ரம் பேசும்போது...

‘‘ஒரு சிலருக்கு கனவில் கற்பனையாக சில படங்கள் தோன்றும். அதுபோன்ற படங்களில் நடிக்கவேண்டும் என்ற ஆசையும் பிறக்கும். ஆனால் என்னைப் பொறுத்தவரை இப்படம் கனவை மீறிய சிறந்த படமாக அமைந்துள்ளது. அந்த அளவுக்கு படம் சூப்பராக வந்துள்ளது. இப்படத்திற்காக எனது உடல் எடையை 30 கிலோவிற்கும் மேல் குறைத்துள்ளேன். அதனால் வீட்டிலேயே சில காலம் முடங்கி கிடந்தேன். அதையும் மீறி அந்த சமயத்தில் என்னை பார்த்தவர்கள் சிலர், ‘இப்படி இளைத்துவிட்டீர்களே?’ என்று கேட்டனர். இந்த அரிய வாய்ப்பு தந்த இயக்குனர் ஷங்கருக்கு நன்றி’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - பாடல் வீடியோ


;